எல்லோரும் என்னயவே காயப்படுத்தறாங்களே.. மூக்கைச் சிந்தும் நிஷா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் யாரையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனால் எல்லோரும் என்னை காயப்படுத்துதாங்களே என்று அலுத்துக் கொண்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.

Recommended Video

    சென்னை: அப்பீட்டான அறந்தாங்கி நிஷா.. அழுகாச்சி காவியமான பிக்பாஸ்.. புலம்பும் ரசிகர்கள்..!

    பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி ரசிகர்கள் என்னதான் கழுவி கழுவி ஊத்தினாலும் ஒவ்வொரு சீசனும் களைகட்டி கொண்டுதான் இருக்கிறது.

    அதுவும் நாலாவது சீசனாக இப்போ ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீசனுக்கும் ரசிகர்களும் பஞ்சமில்லை அதை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கும் பஞ்சமில்லை.

    பிக் பாஸ் கலாய்ப்புகள்

    பிக் பாஸ் கலாய்ப்புகள்

    இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை வைத்து பலருடைய பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இதனைப்பற்றி விதவிதமாக கலாய்த்து வருகிறார்கள் .அதிலும் தற்போது இந்த வீட்டை விட்டு வெளியேறிய அறந்தாங்கி நிஷா வை பற்றி பல்வேறு மீம்ஸ்களும் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

    ரசிகர்கள் மனோ நிலை

    ரசிகர்கள் மனோ நிலை

    வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இவர் தன்னை பற்றி இவ்வளவு நாளா ரசிகர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்று தெரிந்து கொண்டபோது இவருக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறதாம். அன்பு கூட்டணி என்று ஒரு கூட்டணி அமைத்து இவர் அங்கு செய்த செயல்களை வைத்து தான் ரசிகர்கள் வித விதமாக ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

    இருந்த பெயர் கெட்டது

    இருந்த பெயர் கெட்டது

    பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு வரைக்கும் அறந்தாங்கி நிஷா என்றாலே ஒரு காமெடியன் பட்டிமன்ற பேச்சாளர் என்று ஒரு நல்ல பெயர் இருந்தது .ஆனால் இவர் இந்த வீட்டிற்குள் சென்றதும் இவரை பிடித்தவர்கள் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றுதான் பலரும் கமெண்டுகளை போட்டு வந்தனர் .

    ரசிகர்களுக்குப் பிடிக்கலை

    ரசிகர்களுக்குப் பிடிக்கலை

    ரியோ மற்றும் அர்ச்சனாவின் முதுகுக்கு பின்னாடி இருந்து தான் செயல்படுகிறார் என்று தான் பலரும் கூறிவந்தனர். ஆனால் கடைசி வாரத்தில் இவர் ரியோ கூடயும் அர்ச்சனா விடமும் சண்டை எல்லாம் போட்டு பார்த்தார். ஆனாலும் ரசிகர்கள் இவரை வெளியேற்றி விட்டார்கள்.

    சொந்த வீடு திரும்பினார்

    சொந்த வீடு திரும்பினார்


    பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் தனது வீட்டுக்குத் திரும்பி விட்டார். இவருடைய அம்மா இவருக்கு ஆரத்தி எடுத்து வெகுவாகவே வரவேற்று இருக்கிறார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து பெரிய சாதனை புரிந்து வந்த மாதிரி தான் இவர்கள் வரவேற்பு இருந்தது. இதனை ட்ரோல் பண்ணி பல வீடியோக்களும் நெட்டிசன்கள் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.

    என்னை ஏம்ப்பா காயப்படுத்தறீங்க

    என்னை ஏம்ப்பா காயப்படுத்தறீங்க

    இதனை பார்த்த நிஷா நான் யாரையும் காயப்படுத்த கூடாது என நினைக்கிறேன் . ஆனா என்னை தான் எல்லோரும் காயப்படுத்துகிறார்கள் என்று இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். ஆனாலும் அதற்கும் அவரை கலாய்த்து கமெண்டுகளை ரசிகர்கள் போட்டு வருகிறார்கள்.

    வேடிக்கை பார்ப்போம்

    வேடிக்கை பார்ப்போம்

    யாரையும் காயப்படுத்த கூடாது என்பதற்காகத்தான் அன்பு டீமுடன் நீங்களும் இணைந்து செயல்பட்டு கொண்டிருந்தீர்களா என்று இவரை கேள்வி கேட்டு வருகிறார்கள் .ஆனால் இவர் நாங்கள் எந்த குரூப்பிஸமும் பண்ணவில்லை அவரவர் திறமையை நிரூபித்து கொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார். எப்படியோ நிஷா வெளியா வந்தாச்சு.. அடுத்து உள்ளே என்ன நடக்கப் போகுதோ.. வேடிக்கை பார்ப்போம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+