77 பேருக்கு பிரியாணி! நெய் சோறுக்காகவே ஸ்கூல் போவேன்.. பழைய நினைவுகளை பகிர்ந்த அறந்தாங்கி நிஷா
சென்னை: ரம்ஜான் நோன்பு தினத்தை முன்னிட்டு விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா 70 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிஷாவை அந்த மனசுதான் அக்கா கடவுள் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. இவருக்கு வாய்ப்பளித்தவர் ஈரோடு மகேஷ் இதை, நிஷாவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து காமெடி ராணியாக வலம் வந்தார். அது போல் ராமர் வீடு, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 1, பிக்பாஸ் சீசன் 4, பிபி ஜோடிகள் சீசன் 1, காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் கிட்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 4 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் வந்துள்ளார்.
அது போல் குக் வித் கோமாளி சீசன் 1ஐ தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் சிறிது ஓய்வு எடுத்த நிஷா தற்போது மீண்டும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். இவரது அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சியால் தனுஷ் நடித்த மாரி 2 படத்திலும் கோல மாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, கலகலப்பு 2 ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு ஹாஸ்டல் என்ற படத்திலும் தனுஷின் திருச்சிற்றம்பலம், டிரிக்கர் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் வசந்தபாலனின் பெயர் வைக்கப்படாத படத்தில் நிஷா நடித்து வருகிறார். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. இவர் ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.
இவரும் பழனியுடனும், ராமருடனும் செய்யும் காமெடியை பார்த்தால் வடிவேல் கோவை சரளாதான் நினைவுக்கு வருவர். யார் என்ன கிண்டல் செய்தாலும் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்வார். இவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அவர் வீட்டில் நடக்கும் முக்கிய விஷேசங்களை மக்களுக்கு வீடியோவாக பதிவு செய்து பகிருவார்.

அது போல் அவர் கட்டிவரும் வீடு குறித்த வீடியோவையும் ஹோம் டூர் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். தற்போது முஸ்லீம்களின் புனித மாதமான ரமலான் மாதம் நடந்து வருகிறது. இந்த மாதம் அவர்கள் புனித நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவர். அந்த வகையில் நோன்பு தினத்தை முன்னிட்டு தொழுவதற்கு வரும் 77 பேருக்கு பிரியாணி கொடுப்பதாக ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நிஷா ரசிகர்கள் அக்கா உங்களுக்கு உண்மையில் மிகப் பெரிய மனசு என பாராட்டி வருகிறார்கள்.
அந்த வீடியோவில் நெய் சோறு சாப்பிடுவதற்காகவே பள்ளிக்கு செல்வோம் என பழைய நினைவுகளையும் அறந்தாங்கி நிஷா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிரியாணி பொட்டலங்களுடன் ஊறுகாய் பாக்கெட்டையும் வைத்து பேக்கிங் செய்துள்ளார். அது போல் அவரது மகனுக்கு எடுத்த ரம்ஜான் புத்தாடைகளையும் அந்த சிறுவன் வீடியோவில் காண்பித்தான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications