அர்ச்சனா பொண்ணு.. அந்த விஷயத்தில் அம்மாவையே மிஞ்சிடுவாங்க போலயே!
சென்னை: தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அது அர்ச்சனாவின் மகளைப் பார்த்தால் உண்மை என்றே சொல்வார்கள்.
ஒரு காலத்தில் அர்ச்சனா என்றால் இளமைப் புதுமை.. இளமைப் புதுமை என்றால் அர்ச்சனா. ரசிகர்களை தங்களது திறமை, அழகால் கட்டிப் போட்ட வெகு சில தொகுப்பாளினிகளில் அர்ச்சனாவுக்கும் முக்கிய இடம் உண்டு. அதை மறுக்கவே முடியாதுங்க.
இப்போது அர்ச்சனா 2.0 வெர்ஷனாக மாறி ஜி டிவியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஜி டிவியின் முக்கியமான தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

குட்டி பதினாறு அடி
இப்ப நாம பேசப் போவது அர்ச்சனாவைப் பற்றி இல்லைங்க.. அவரோட மகளைப் பத்தித்தான். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்று சொல்வார்கள். அதே போல தான் அர்ச்சனாவும் அவரது மகளும் இருக்கின்றனர். கஷ்டமான குடும்பத்தில் பிறந்து எவ்வளவு கஷ்டப்பட்டு முட்டி போராடித்தான் அர்ச்சனா இன்று இருக்கும் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்.

படு சுட்டி சாரா
அவர் மேடை பயம் கொஞ்சம் கூட இல்லாமல் சகஜமாக பேசுவது அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் . அவருடைய திறமையினால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறார். அவரது பொண்ணு சாரா அவரை விடவும் படு சுட்டியாக இருக்கிறார். கிட்டத்தட்ட அர்ச்சனாவுக்கே செம டப் கொடுக்கிறார். அவருக்கு போட்டியாகவே அவருடைய பொண்ணும் கலக்குகிறார்.. அறிவிலும், அழகிலும்.

அம்மாவை விட அழகு
ஸ்டேஜ் ப்ரோக்ராம் பண்ணுவதில் அவர் அம்மாவை விடவும் இவர் தனித்திறமையை அழகாக பண்ணிக் கொண்டிருக்கிறார். ஜீ தமிழில் இவர்கள் இருவரும் சேர்ந்து இப்போது நடத்திய நிகழ்ச்சி பொதுவாக மக்களை கவர்ந்து இருக்கிறது. அர்ச்சனாவின் குட்டி பொண்ணுக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது.

வீட்டிலிருந்தே லைவ்
இப்ப இருக்கிற சூழ்நிலையில் வீட்டில் இருந்து கொண்டு இருவருமே சின்னத்திரை நடிகர்கள் கலாய்த்து லைவ் வீடியோஸ் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் .இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கு. இவர்கள் இருவரும் சேர்ந்து வீட்டில் போட்டோஷூட் நடத்தி போட்டோஸ்களை இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்.

வாயாடி இல்லை.. அழகுக் குட்டி
அதைப்பார்த்து நெட்டிசன்கள் அம்மா அர்ச்சனாவை விடவும் குட்டி பாப்பா சாரா வாயாடி பொண்ணு போல அப்படின்னு கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். வாயாடி மட்டுமில்லிங்க.. நல்லா அறிவோட பேசவும் தெரிஞ்சு வச்சிருக்குங்க சாரா பொண்ணு.. விரைவிலேயே தனி ஆவர்த்தனமாக சாரேவே தனித்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி சாதனை படைப்பார் என்று நம்பலாம்.

ரசிக்கும்படி இருக்கே
லாப் டவுன் காரணமாக மக்கள் எல்லாரும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலையில் மக்களுக்கு பொழுதுபோக்கும் விதமாக இணையதளங்களில் சினிமா நட்சத்திரங்கள் தங்களுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் அர்ச்சனாவும் அவரது மகளும் போட்டு வரும் புகைப்படங்களும் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications