அட.. நம்ம அர்ச்சனா செம ஆட்டம்ங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமையல் தெரிஞ்சவங்களுக்கு வியர்வை. அனல் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அது அவர்களின் விருப்பப்பட்ட கலை.

இப்படித்தான் எல்லாருக்கும் எல்லாமும். அப்படி நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகம் ஆன நம்ம ஜீ தமிழ் டிவி அர்ச்சனா ஜீ தமிழ் டிவி குடும்ப விருதுகளுக்காக டான்சும் ஆடி கலக்கி இருக்கார்.

நம்ம அர்ச்சனாவா இது என்று கூறும்படி செம குத்து என்று டான்ஸ் போட்டு இருக்கார். நாளை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

 சன் டிவி நிகழ்ச்சி

சன் டிவி நிகழ்ச்சி

சன் டிவியின் இளமை புதுமை நிகழ்ச்சியை ஸ்வர்ணமால்யாவுக்கு பிறகு அர்ச்சனாதான் தொகுத்து வழங்கினார். சில வருடங்கள் சன் டிவியில் இருந்தவர் திருமணத்துக்குப் பிறகு விஜய் டிவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வந்தார்.

ஜீ தமிழ் டிவியில் அர்ச்சனா

ஜீ தமிழ் டிவியில் அர்ச்சனா

ஜீ தமிழ் டிவியின் தொகுப்பாளினியாக அர்ச்சனா இப்போது கலக்கி வருகிறாரா. எப்படி விஜய் டிவிக்கு ஒரு பிரியங்கா கிடைத்தாரோ அப்படித்தான் இவரும் புகழடைந்து இருக்கார். சன் டிவியின் தொகுப்பாளராக இருந்த தீபக்கும் இப்போது ஜீ தமிழ் டிவியில் கலக்கி வருகிறார்.

இப்போதும் கலை

இப்போதும் கலை

எப்போதும் போல ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகளில் கலை நிகழ்சசிகளும் உண்டு.இதில் ஒரு பாடலுக்கு செம டான்ஸ் ஆடி இருக்கார் அர்ச்சனா. டான்சில் ஆர்வம் என்று வந்துவிட்டால், உடல் பருமன் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல இருக்கிறது இவரின் ஆட்டம்.

நூலைப் போல

நூலைப் போல

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்பார்கள்.அப்படி இவரது சின்னஞ்சிறு மகளும் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் சில நிமிடங்கள் மக்களின் விருப்பத்துக்காக ஆங்கரிக்கும் செய்து அசத்தி இருக்கார்.

நாளை மாலை இவைகளைப் பார்த்து மகிழுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+