Ayudha Ezhuthu Serial: படிச்ச பொண்ணு இப்படியும் இருப்பாய்ங்களா?
சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலக்டரா இருக்கற ஒரு பொண்ணு படிச்ச பையன்னு சக்தியை காதலிச்சு கடைசி வரைக்கும் கிராமத்து ரவுடி காளி அம்மா பையன் அவன்னு தெரியாமலே ஏமாந்து போகுது.
குறுகிய கிராமத்தில் இப்படியும் ஒரு சப் கலெக்டர் ஏமாந்து போவாங்களான்னு இருக்குது.
இவ்ளோ நடந்தும் ஒண்ணுமே நடக்காது போல ஏமாத்தின சக்தி இன்னும் லவ் லெட்டர் எழுதிக்கிட்டு திரியறது வேடிக்கையா இருக்குது.

இந்திரா சக்தி
சப் கலெக்டர் இந்திரா அந்த ஊருக்குள் பதவி ஏற்று வந்த உடனே சக்தி அவளை காதலிக்க ஆரம்பிச்சுடறான். சக்தி இந்திராவுக்கு எதிரான காரியங்களை அந்த ஊரில் செய்யும் ரவுடி காளி அம்மாவின் மகன் என்கிற உண்மையை மறைக்கிறான்.தான் படிக்காதவன் என்கிற உண்மையை மறைக்கிறான்.

லண்டன் ரிட்டர்ன்
சக்தி தான் லண்டன் ரிட்டர்ன் என்றும், லண்டனில் எம்பிஏ படித்தவன் என்றும் பொய் பேசுவதை கூட ஒரு சப் கலெக்டரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை கூட மன்னித்து விடலாம். சக்தி காளி அம்மாவின் மகன் என்பதை கூட கல்யாணம் முடியும் வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இவர் என்ன சப் கலெக்டர் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கல்யாணம் செய்து
சக்திக்கு இந்திராவை ஏமாற்றி கல்யாணம் செய்துகொண்டு விட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் மீண்டும் மீண்டும் என்று லவ் லெட்டர் எழுதுவதும், இதில் மானே தேனே போடலையா என்று காமெடி செய்வது என்பதும் வேடிக்கையாக இருக்கிறது.

அம்மா ஆட்டுவிக்க
ஒரு சப் கலெக்டரை அம்மா ஆட்டுவிக்கறாங்க என்பது கூட வேண்டாம். தனது மனைவியை அம்மா தனது இஷ்டத்துக்கு ஆட்டுவிக்கறாங்க. அதாவது காளி அம்மா மருமகள் இந்திரா பாலில் விஷத்தை கலந்துட்டா என்று பொய் சொல்றாங்க. அதை நிரூபிக்க விரதம் இரு கோயிலில் காப்பு கட்டிக்கோ, மடி பிச்சை எடு.. பொங்கல் வைன்னு சொல்றாங்க..
இவன் என்னடான்னா லவ் லெட்டர் எழுதிக்கிட்டு நிக்கறான்.. ஓ.. லெட்டர்ல மானே தேனேன்னு போடலையான்னு கேட்கறான்.. என்ன கதைடா சாமி?!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications