லைம்லைட்டில் இருக்கணும்னே மகேந்திரனை ராஜகுமாரன் இப்படி பேசறாரா? தலை தலையா அடிச்சுக்கிட்ட தேவயானி?
சென்னை: தேவயானி கணவர் ராஜகுமாரன் மட்டுமல்ல, சில ரிடையர்டு டைரக்டர்கள், ரிடையர்டு நடிகர்கள் போன்றோர் சர்ச்சையாகவே பேசி வருகிறார்கள்.. லைம்லைட்டுக்காக இப்படி பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை கிடையாது.. ஒருகட்டத்துக்கு மேல் இவர்களுக்கான புரிதல் அவ்வளவுதான்" என்று வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காட்டமாக கூறியிருக்கிறார்.
Legal Voice என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "சமீபத்திய நேர்காணல்களில் இயக்குநர் ராஜகுமாரன், இயக்குநர் மகேந்திரன் குறித்து தரக்குறைவாக பேசி வருகிறார்.. இந்த சர்ச்சை பேச்சுக்கள் ஆணவத்துடனும் அகங்காரத்துடனும் உள்ளது.

உதிரிப்பூக்கள்
மகேந்திரனின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றான "உதிரிப் பூக்கள்" படத்தை ராஜகுமாரன் விமர்சித்துள்ளார்.. அதற்கான அவசியம் இப்போது என்ன வந்தது? "என்ன பெருசா எடுத்துட்டாருன்னு" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.. அன்றைய காலத்தில் பேசி படம் எடுத்தபோது, காட்சிகளாலும் படங்களை நகர்த்த முடியும் என்பதை நிரூபித்தவர் மகேந்திரன்.
இயக்குநர் மகேந்திரனின் கால் தூசிக்குக்கூட இன்றுள்ள எந்த இயக்குநரும் சமமாக மாட்டார்கள்.. மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், மெட்டி இன்றும் உயிரோட்டமான படங்களாக காலத்தால் அழியாத படைப்புகளாக உள்ளன..
முள்ளும் மலரும்
ஒரு ஆசிரியர் எப்படி வாழக்கூடாது என்று வாழ்ந்துவிட்டு, இறுதியில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து "செத்துப்போ" என்று சொல்லும் நிலையில் இறந்து போவதை சித்தரிக்கும் அற்புதமான கதை அம்சத்தை கொண்ட படம் உதிரிப்பூக்கள்..
"முள்ளும் மலரும்" படத்தில் ரஜினி ஏற்று நடித்த காளியின் பாத்திரம், "கெட்ட பய சார் இந்த காளி" என்று பரவாயில்லை, கேவலம் நம்மல்லாம் மனுசங்கதானே? என்று சொல்லும் அளவுக்கு மிகவும் அருமையாக இருக்கும்..
எப்போதுமே, ஒரு கலைஞன் என்பவன், சக கலைஞர்களை மதிக்க தெரிய வேண்டும்.. ஆனால் ராஜகுமாரன் மறைந்த ஒரு கலைஞரை பற்றி இப்படி விமர்சிப்பது வருத்தத்திற்குரியது.. இப்போதுவரை ராஜகுமாரனை அவருடைய படங்களை வைத்து யாரும் பேசவில்லை,.. தேவயானியின் கணவர் என்றுதான் சொல்கிறார்கள்.
ரிடையர் டைரக்டர்
டைரக்டர் ஷங்கர் எங்காவது பேட்டி இருக்கா? வெகு குறைவுதான்.. ஆனால் ரிடையர் ஆகிவிட்டு ராஜகுமாரன் போன்றோர் தேவையில்லாமல் பேசி வருகிறார்கள்..
மறைந்தவர்கள் பற்றி யாருமே விமர்சித்து கொண்டிருக்க மாட்டார்கள்...
ராஜகுமாரன் இப்படியே பேசி பேசி மாட்டிக்கிறாரு, தேவயானிக்காகத்தான் குறைச்சு விமர்சிக்கிறாங்க.. இல்லாவிட்டால் சோஷியல் மீடியாவில் இன்னும் கடுமையாகவே ராஜகுமாரனை விமர்சித்திருப்பார்கள்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்" படத்தை அவர் நன்றாகவே எடுத்திருக்கலாம்.. தேவயானியின் ஒரிஜினல் வாய்ஸ் என்று சொல்லி, அந்த படத்தை குழப்பி, உழப்பி, படமே தோல்வியடைந்துவிட்டது..
ரஜினியின் கூலி படத்துக்கு டைட்டில் சரியில்லை என்கிறார் ராஜகுமாரன், ரஜினியின் முகம் காட்டியே ஓடாத படம், பெயரை மாற்றம் செய்திருந்தால் மட்டும் ஓடியிருக்க போகுதா என்ன? கதையம்சம் இருந்தால் எந்த படமாக இருந்தாலும் ஓடத்தான் செய்யும்.
அதேபோல கமல்ஹாசனுக்கு டைரக்ஷன் போதாது என்கிறார் ராஜகுமாரன்.. மொத்தத்தில் ஒரு கலைஞன், குறிப்பாக ஒரு இயக்குநர், சக கலைஞர்களையும் சக மனிதர்களையும் மதிக்க தெரிய வேண்டும்..
ராஜகுமாரன் - சர்ச்சை
ராஜகுமாரன் மட்டுமல்ல, சில ரிடையர்டு டைரக்டர்கள், ரிடையர்டு நடிகர்கள் போன்றோர் சர்ச்சையாக பேசி வருகிறார்கள்.. லைம்லைட்டுக்காக இப்படி பேசுவதாக சொல்கிறார்கள்.. கிடையவே கிடையாது.. ஒருகட்டத்துக்கு மேல் இவர்களுக்கான புரிதல் அவ்வளவுதான்.
அதேபோல இயக்குநர்கள் தங்கள் எதிர்காலத்துக்காகவும், படம் இயக்குவதற்கான வாய்ப்புக்காகவும்தான், நடிகைகளை காதலிக்கிறார்கள் என்கிறார்கள்.. அதெல்லாம் தவறான கருத்து.. உதாரணமாக, செல்வமணி, ரோஜா இவர்கள் சிறப்பான தம்பதிகளாக, வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்? " என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
தர்மசங்கடத்தில் தேவயானி
2 நாட்களுக்கு முன்பு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தந்திருந்த ஒரு பேட்டியில், "ராஜகுமாரனின் சமீபத்திய பேட்டிகளை பார்த்த தேவயானி "சோறு போட மாட்டேன்" என்று சொல்லிவிட்டாராம்.. பல இயக்குனர்கள் தரப்பில் இருந்து தேவயானிக்கு புகார் போன்கள் சென்றதாம்.. இது தேவயானிக்கு தர்மசங்கடத்தை தந்துள்ளது.. இதற்கு பிறகுதான் சர்ச்சையான பேட்டிகளை தராமல் அமைதி காத்து வருகிறார் ராஜகுமாரன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications