வித்தை காட்டிய மணிவண்ணன்.. நடிகர் மோகன் எடுத்த ரிஸ்க்.. சொல்லும்போதே பூரித்த நடிகை நளினி.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் மோகன் குறித்து, நடிகை நளினி தந்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதனை மோகனின் ரசிகர்களே இணையத்தில் டிரெண்டாக்கியும், வீடியோவை ஷேர் செய்தும் வருகிறார்கள்.
தனக்கென மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சம்பாதித்துள்ளவர் மோகன்... 80களின் காலகட்டத்தில் மோகன் படமென்றால் மினிமம் கியாரண்டி நிச்சயம் என்பார்கள் தயாரிப்பாளர்கள்.. மோகன் படம் ரிலீஸ் ஆனாலே, விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் படுகுஷியாகிவிடுவார்களாம்..

சம்பளம்: விட்டுக்கொடுக்கும் மனசுக்காரர் மோகன்.. அதனால்தான், வயது வித்தியாசமில்லாமல், இன்றுவரை மோகனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.. ரசிகர்கள் முதல் சினிமா துறையினர் வரை இப்படி நல்ல பெயரை சம்பாதிக்கும் நடிகர்கள் மிகவும் குறைவு.

television mohan manivannan nalini

நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல், வில்லனாகவும் 'நூறாவது நாள்' படத்தில் நடித்திருந்தார் மோகன்.. இத்தனைக்கும் அந்த நேரத்தில் சம்பளம், ரசிகர்கள், பாப்புலாரிட்டி என அனைத்திலுமே கமல், ரஜினிக்கு இணையானவராக கலக்கி கொண்டிருந்தார் மோகன்.

இமேஜ்: ஹீரோ என்ற இமேஜை பார்க்காமல் அன்று மோகன் துணிந்து நடித்ததால்தான், சமீபத்தில்கூட விஜய் ஆண்டனி நடித்து வெளியாகியிருந்த 'கொலைகாரன்' படத்தில் மோகனின் 'நூறாவது நாள்' பட விளம்பரத்தை பயன்படுத்தியிருந்தார்கள். அந்த அளவுக்கு நூறாவது நாள் பட திரைக்கதையில் வித்தை காட்டியிருந்தார் மணிவண்ணன்.

விஜயகாந்த், மோகன், சத்யராஜ், நளினி உள்ளிட்ட பலர் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் இந்த படம் 1984ம் ஆண்டு வெளியாகியிருந்தது.. திரில்லர் படம் என்பதுடன், பரபரப்பையும் பதட்டத்தையும் அந்த நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது.

ஒரே நாளில் குடும்பத்தினர் 9 பேரை கொலை செய்த வழக்கில் கைதாகியிருந்த ஜெயப்பிரகாஷ், "நூறாவது நாள் படத்தை பார்த்துவிட்டுதான் அதே போல் குடும்பத்தினரை கொலை செய்தேன் "என்று போலீஸில் வாக்குமூலம் தரவும், அதுவரை சுமாராக ஓடிக் கொண்டிருந்த இந்த படம், ஜெயப்பிரகாஷின் வாக்குமூலத்துக்கு பிறகு ; பரபரப்பாக பேசப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நடிகை நளினி: நடிகை நளினி ஒரு யூடியூப் சேனலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியிலும், நூறாவது நாள் படத்தை பற்றியும், இந்த படத்தில் வில்லனாக நடித்த மோகன் பற்றியும் நெகிழ்ந்து கூறியிருந்தார்.

"மணிவண்ணன் சார்தான் எனக்கு இந்த கதையை சொன்னார்.. எப்படி நடக்கணும், எப்படி பயப்படணும், சுவரை உடைத்ததுமே சடலம் வெளியே வந்ததும் அலறணும் என்றெல்லாம் சொல்லி தந்தார். ஆனால், இதை கதையாக எடுத்து முடித்து, படமாக பார்க்கும்போதுதான், இந்த படத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என்றே தெரிந்தது.

கமலா தியேட்டர்: கமலா தியேட்டரில் இந்த படத்தை ரீ-ரிக்கார்டிங்குடன் சேர்த்து நான் பார்த்தபோது, நான் நடித்த சீனை பார்த்து, நானே அலறிவிட்டேன்.. இந்த படத்தை வைத்துதான் கொலை சம்பவம் ஒன்றும் அப்போது நடந்திருந்தது. அதற்கு சம்பவத்துக்கு பிறகு, நூறாவது நாள் படம் எங்கியோ போய்விட்டது. எல்லா இடமும் ஒரே பரபரப்பாகிவிட்டது. இதனால், என்னதான் படத்தில் செய்துள்ளோம் என்று நினைத்து, மறுபடியும் அதே படத்தை போய் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

1983-84 காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குரிய படமாக நூறாவது நாள் அமைந்தது.. இதில், இன்னொரு சிறப்பான விஷயம், அதுவரை இல்லாமல், முதல்முறையாக வில்லனாக நடித்திருந்தார் மோகன்.. பெரும்பாலும் ஹீரோக்கள் நடிக்க தயங்கக்கூடிய கேரக்டர் என்றாலும், மோகன் ரிஸ்க் எடுத்தார்.. ஒரு படத்தில் வில்லனாக நடித்தால், அடுத்தடுத்த வில்லனாகவே வாய்ப்பு வந்துவிடுமே என்று பயப்படாமல் துணிந்து வில்லனாக நடித்தார். இப்படியொரு முடிவு, அந்த காலகட்டத்தில் ரொம்ப பெரிய விஷயம்.

கலக்கும் மோகன்: தற்போது கோட் படம் வெளியாயிருக்கிறது.. இன்னும் இந்த படத்தை பார்க்கவில்லை.. ஆனால், எங்க மோகன் எப்பவுமே வேற லெவலில் கலக்குவார்.. எப்பவுமெ ரொம்ப ஃப்ரெண்ட்லியாகவே பழகுவார்..

பயணங்கள் முடிவதில்லை போன்ற மெகா ஹிட் படத்தை தந்துள்ளோம் என்ற பந்தா துளியும் இல்லாமல், பழகக்கூடியவர் மோகன்.. கிவ் & டேக் ஆர்டிஸ்ட் என்பார்கள்.. நீ இதை பேசு, நான் அப்படி பேசுகிறேன் என்று விட்டுக்கொடுத்தும், சொல்லிக் கொடுத்தும் நடிக்கக்கூடியவர் மோகன்" என்று புகழாரம் சூட்டியிருந்தார் நளினி. இதைத்தான் மோகனின் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+