அசிங்கப்பட்ட அர்ணவ்.. ஒரு வண்டியில 2 மாடு ஓட்ட ஆசைப்பட்டாரு.. பிரபலம் ஒரே போடு: பிக் பாஸ் சீசன் 8
சென்னை: நேற்றைய பிக்பாஸ் வீட்டிலிருந்து அர்னவ் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அர்னவ் திடீர் வெளியேற்றத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து, நடிகை அனுராதா தந்த பேட்டி, பலரது கவனத்தையும் இணையத்தில் பெற்று வருகிறது.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில், அர்னவ் வெளியேறியிருக்கிறார்.. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அர்னவ் மீது அதிகம் விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டுள்ளார்.

அன்ஷிதா: அன்ஷிதாவுடன் சேர்ந்து கொண்டு தன்னைத் துன்புறுத்துகிறார் என்று அர்னவ்வின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அர்னவ், அன்ஷிதா இருவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
எனினும், அர்னவ் அன்ஷிதா இருவருமே தங்களது பர்சனல் குறித்து, பிக்பாஸ் வீட்டுக்குள் பேசாதபோதும், அர்னவ், அவரது மனைவி திவ்யா, அன்ஷிதா 3 பேரும் பேசிய ஆடியோ கால் சண்டை, இணையத்தில் பரபரத்தது. இதெல்லாம் அர்னவ், மீதான இமேஜை இன்னும் டேமேஜ் செய்துவிட்டது என்கிறார்கள்.
வன்மம்: "டேய் நீங்க எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்கு எதுக்குடா வந்தீங்க?" என்று போட்டியாளர்களை பேசியதுமே கடுப்பான விஜய்சேதுபதி, இது வன்மத்தை கக்கும் இடமில்லை என்று அட்வைஸ் சொல்லவும், அவமானத்தோடு வெளியேறினார் அர்னவ்.
இந்நிலையில், நடிகை அனுராதா கலாட்டா சேனலுக்கு ஒரு பேட்டி தந்திருக்கிறார்.. அந்த பேட்டியில், அவர் சொன்னபோது "சொம்பு தூக்கி" டேக்கை அன்ஷிதாவிற்கு டீம்தான் தந்தது, அது டீம் எடுத்த முடிவு என்று அர்னவ் சொன்னது ரொம்ப ரொம்ப தப்பு. உண்மையிலேயே "சொம்பு தூக்கி" டேக்கை அன்ஷிதாவிற்கு தான் கொடுக்க வேண்டும் என்பதில் அர்னவ் உறுதியாக இருந்தார்.
அன்ஷிதா: இதைப்பார்த்த சக போட்டியாளர்கள், இதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? அன்ஷிதாவிற்கு நீங்கள்தான் கொடுக்க வேண்டுமா என்று கேட்டபோதும் கூட, ஆமாம், நான் உறுதியாக இருக்கிறேன். இதை அன்ஷிகாவிற்குதான் கொடுக்க வேண்டும் என்று அர்னவ் சொன்னார்.. அந்த விஷயத்தில், அர்னவிடம் அன்ஷிதா கேட்ட விஷயம் மிகவும் சரியானதே.
ஏனென்றால், அன்ஷிதா யார் என்பது அர்னவிற்கு நல்லாவே தெரியும். கிட்டத்தட்ட 24 மணி நேரத்தில் 16 முதல் 18 மணி வரை அவர்கள் 2 பேரும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்காக இவரும், இவருக்காக அவரும் பலமுறை பலரிடம் சண்டை போட்டிருக்கிறார்கள்.
ஆடியோ லீக்: செல்லம்மா சீரியலின் ஹீரோயின் என்ற அடையாளம் பெற்றதுமே, அர்னவ் திவ்யா இடையிலான பிரச்சினையில் தலையிட்டு, அதில் ஆடியோ லீக் ஆயிருச்சு.. இதுலதான் அவளது பெயர் கெட்டுப் போய்விட்டது
மனைவிகூட பிரச்சனை என்றாலும்கூட, அன்ஷிதாவும் வேண்டும், மனைவியும் வேண்டும் என்பதே அர்னவின் மனநிலையாக இருந்தது.. அப்படி 2 மாடுகளை ஒரே வண்டியில் ஓட்ட முடியாது. நம்முடைய கலாச்சாரத்திற்கு அது செட் ஆகாது. அர்னவ் தந்த ஒரு பேட்டியில், "நான் முஸ்லிம் என்பதால் எத்தனை கல்யாணம் வேண்டும்னாலும் செய்யலாம் என்று அர்னவ் சொல்லியிருந்தார். அதெல்லாம் ஆனால், இன்றைய வாழ்க்கை அது கிடையாது.
யாருக்காவது ஒன்றென்றால் உடனே இரக்கப்படுவான் அர்னவ்.. ஆனாலும், நான் இப்படித்தான் பண்ணுவேன்னு ஒரு பிடிவாதமும் இருக்கு.. அன்ஷிதா - அர்னவ்வின் தனிப்பட்ட உறவு பற்றி எனக்கு உறுதியாக தெரியாது. ஆனால், 2 பேரும் ஒன்னா போவாங்க, ஒன்னா சாப்பிடுவாங்க.. நல்ல நெருக்கமான நட்பாக இருந்தார்கள்..
எப்போதுமே, தம்பதிக்குள் நம்மளால் ஒரு பிரச்சனை என்றால் ஒதுங்கிவிட வேண்டும். ஆனால் இங்கே அப்படி நடக்கவில்லை.. "அவளுக்காக நாம ஏன் மாத்திக்காணும்? அவளை வேணும்னாலும் விலகி போக சொல்லு" என்றெல்லாம் பேசுவது தப்பு.. இந்த வெயித்தெரிச்சலும், அந்த பெண் அழுத அழுகையும்தான் இப்போ இவங்களுக்கே திருப்பியடிக்குது" " என்றெல்லாம் அனுராதா பேசியிருக்கிறார்.
கல்யாணத்தின்போதுதான் திவ்யாவை முதன் முதலா நாங்க பார்த்தோம்.. அதுக்கு முன்னாடி திவ்யா யார்னுகூட எனக்கு தெரியாது... இதுக்கப்பறம் அன்ஷிதாவோடு அர்னவ் பழகுவதை திவ்யாகிட்ட நாங்கள் சொல்லிவிட்டோம். இதனால் அர்னவ் என்கிட்ட கோபப்பட்டார். உங்களால் தான் எங்க வீட்டில் பிரச்சனைன்னு சொன்னார்.. இதைக்கேட்டதுமே எனக்கு கோபம் வந்துவிட்டது, ஏன்னா நான் திவ்யாகிட்ட எதுவும் சொல்லலியே
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications