சத்தம் ஓவரா வருதே.. திடீரென பிரியங்காவுக்கு இத்தனை பேர் ஆதரவு? சைலண்ட்டில் மணிமேகலை? இதுதான் காரணமா
சென்னை: பிரியங்கா - மணிமேகலை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், விஜய் டிவிக்குள்ளேயே சில சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது பிரியங்காவுக்கு ஆதரவான நடவடிக்கையாக இருப்பதாகவும் சலசலக்கப்படுகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, திடீரென அதிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார்.. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரின் ஆதிக்கமே தன்னுடைய முடிவுக்கு காரணம் என்று மணிமேகலை மறைமுகமாக கூறியிருந்த நிலையில், அவர் குறிப்பிடுவது பிரியங்காவைதான் என்று நெட்டிசன்கள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.

மணிமேகலை: மணிமேலை இப்படி அறிவிப்பு வெளியிட்டதுமே, விஜய் டிவியின் பிரபலங்களே பலர், மணிமேகலைக்கு ஆதரவாக கமெண்ட் செய்திருந்தனர். மிகவும் துணிச்சலான முடிவு என்று கூறி வெளிப்படையாகவே பாராட்டியிருந்தனர்.. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை.. திடீரென அந்த கமெண்ட்களை அவர்களே நீக்கி விட்டார்கள்..
அதேபோல, பிரியங்காவும், மணிமேகலையும் வாதம் செய்வதுபோல ஒரு ஆடியோ லீக் ஆனது.. இந்த ஆடியோ லீக் செய்தது யார் என்று தெரியவில்லை.. ஆனால், அந்த ஆடியோவும் டெலிட் செய்யப்பட்டுவிட்டது.
என்ன காரணம்: இதற்கு நடுவில், பிரபல நடிகர் ஆர்.ஜே. ஷா, மணிமேகலை - பிரியங்கா இடையே நடந்த விஷயம் குறித்து விஜய் டிவி தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரித்தாராம்.. அதை தன்னுடைய யூடியூப் சேனலிலும் பதிவிட்டிருந்தார்.. அதில் விஜய் டிவி நிறுவனம்தான், மணிமேகலையை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றியதாக கூறியிருந்தார். ஆனால், என்ன நடந்தது என்று தெரியவில்லை.. அந்த வீடியோவும் நீக்கப்பட்டுவிட்டது.
அதற்கு பிறகு மணிமேகலைக்கான ஆதரவுகள் விஜய் டிவியின் பிரபலங்களிடமிருந்து மெல்ல குறைய துவங்கிவிட்டன.. மாறாக, பிரியங்காவுக்கான ஆதரவு தலைதூக்க துவங்கிவிட்டது.
டார்கெட்: சூப்பர் சிங்கர் பூஜா, தன்னுடைய பதிவில், "இப்படியெல்லாம் ஒருத்தரை டார்கெட் செய்து காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்" என்று கூறி பிரியங்காவுக்கு சப்போர்ட்டை தந்தார்.. பிரியங்காவின் தோழியான பாவனி ரெட்டியும், தன்னுடைய ஆதரவை தந்தார்.. பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சுனிதாவும், பிரியங்காவுக்கான ஆதரவை தந்தார். குரேஷியும் பிரியங்காவுக்கே ஆதரவை வழங்கினார்.. பிரபல நடிகை ஷகிலாவும் பிரியங்காவுக்கு ஆதரவை வழங்கி, மணிமேகலையை விமர்சித்துள்ளார்.
இவர்கள் மட்டுமல்ல, செய்தியாளர்களிடம் பேசிய மகாபா, புகழ் இருவருமே தங்கள் கருத்தை வெளிப்படையாக சொல்லவில்லை.. பிரியங்காவின் நெருங்கிய நட்பான மகாபா, பதில் சொல்லாமல் நழுவியது அதிர்ச்சியையே தந்தது.

குக் வித் கோமாளி: அதேபோல, குக் வித் கோமாளியில் ஆரம்ப சீசனிலிருந்தே பங்கேற்று வரும் புகழ், இதை பற்றி எதுவுமே கருத்து சொல்லாமல் நழுவியிருந்தது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் 2 பேரும் பேசி தீர்த்துக் கொள்ள விஷயம் இதுவென்றாலும், சம்பவ நேரத்தில் உடனிருந்தவர்களே இதை பற்றி கருத்து சொல்லாமல் அமைதி காப்பது, பிரியங்காவுக்கான ஆதரவை வழங்குவதாகவே நெட்டிசன்கள் கருதுகிறார்கள்.
மணிமேகலைக்கு ஆரம்பத்திலிருந்த ஆதரவு, விஜய் டிவி பிரபலங்களிடமிருந்து திடீரென குறைய என்ன காரணம் என்று தெரியவில்லை.. அதேபோல, கடந்த 2 நாட்களாகவே பிரியங்காவுக்கு விஜய் டிவி பிரபலங்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவுக்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.. ஒருவேளை, இதெல்லாம் விஜய் டிவியின் அசைன்மென்ட்டாக இருக்கலாம் என்கிறார்கள்.
மணியோசை: எனினும், பிரியங்காவுக்கு விஜய் டிவி பிரமுகர்கள் தரப்பிலிருந்து மட்டுமே ஆதரவுகள் கிடைக்கிறதே தவிர, மக்களிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை.. நியாயத்தின் பக்கம் இதுவரை ஆதரவாக கருத்து சொல்லிவரும் மக்கள், இப்போதும் அப்படியே தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாய் உள்ளனர்.. எந்தவகையில் பிரச்சனையை திசை திருப்பினாலும், தங்கள் மீது தவறல்ல என்று பில்டப்களை தந்தாலும், சோஷியல் மீடியா முழுக்க "மணியின் ஓசைதான்" சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications