விக்ரம் மகன் துருவ்- அனுபமா இடையே காதல்? வைரலாகும் லிப் லாக் போட்டோ? உண்மை என்ன?
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வருடன் டேட்டிங்கில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் லிப் லாக்கில் இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரமனின் மகன் துருவ் விக்ரம். இவர் ஆதித்ய வர்மா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை பாலா இயக்கினார். பின்னர் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் பாலா படத்தில் இருந்து விலகிவிட்டார்.

அதன்பிறகு ஆதித்யவர்மா படம் வெளியானது. இந்த படத்தை வர்மா என்ற பெயரில் 2020 ஆம் ஆண்டு ஓடிடி தளத்தில் இயக்குநர் பாலா வெளியிட்டார். இதையடுத்து தனது தந்தை விக்ரமுடன் சேர்ந்து மகான் என்ற படத்தில் துருவ் நடித்திருந்தார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.
ஓடிடி தளம்
மகான் படம் ஓடிடியில் வெளியானது. அப்போது துருவின் நடிப்பை பலர் பாராட்டினர். இந்த நிலையில் துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பைசன் களமாடன் படத்தில் நடித்து வருகிறார். கபடி வீரராக நடித்துள்ளார்.
பா ரஞ்சித்
இந்த படத்தை பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். இதில் துருவுடன் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, லால், அனுராக் அரோரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் இந்த ஆண்டு திரைக்கு வரும் என தெரிகிறது.
வதந்தி
இந்த நிலையில்தான் துருவ் விக்ரம், அனுபவமா பரமேஸ்வரனும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவி வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் ப்ளூமூன் என்ற தலைப்பில் ஸ்பாட்டிஃபையில் பிளே லிஸ்டை வைத்திருந்தார் அனுபமா. இதில் இருவர் முத்தம் கொடுத்து கொள்வது போல் புகைப்படம் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அனுபமா, துருவ் போல் இருப்பதால் அவர்கள்தான் லிப் லாக் செய்வதாக நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.
ரெடிட் தளம்
அதாவது ரெடிட் தளத்தில் இந்த போட்டோ வைரலாக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிளேலிஸ்ட் பிரைவேட் ஆக்கப்பட்டுள்ளது. இந்த ஐடியில் துருவும் அனுபமாவும் பகிர்ந்து பாடல் கேட்பார்கள் என சொல்லப்படுகிறது. எனினும் இதுவரை அவர்களிடம் இருந்து எந்த மறுப்பும் வரவில்லை. ஒரு வேளை இது பட ப்ரமோஷனுக்காகவா இல்லை பட சூட்டிங்கா என்றும் தெரியவில்லை. தற்போது பட விளம்பரத்திற்காக இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை பட குழுவே பரப்பி விடுவதும் நடப்பது அனைவரும் அறிந்ததே. எனவே அந்த வகையில் இந்த படமும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
வயதில் மூத்த அனுபமா
விக்ரம் மகன் துருவுக்கு தற்போது 27 வயதாகிறது. அவரை விட அனுபமா மூத்தவர். அவருக்கு 29 வயதாகிறது. தன்னை விட 2 வயது சிறியவரை அனுபமா காதலித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளன. இவர்கள் இருவரும் பைசன் படத்தில் நடித்து வரும் நிலையில் அப்போது காதல் ஏற்பட்டு டேட்டிங்கில் இருந்து வருவதாக சொல்லப்பட்டது. இது உறுதியாக தெரியவில்லை. பட வெளியீட்டின் போது நிருபர்கள் கேட்கும் போது இவர்கள் அதற்கு விளக்கமளிப்பார்களா, இல்லை பிரஸ்ஸை சந்திக்காமல் போய்விடுவார்களா, இல்லை பிரஸ் மீட்டே நடத்தப்படாதா என்ற கேள்வி எழுகிறது.
காதல் சர்ச்சை
நடிகர் துருவ் இது போல் காதல் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு ஆதித்யவர்மா படத்தில் நடித்த பனிடா என்ற நடிகையை துருவ் காதலிப்பதாக தகவல் பரவியது. அந்த வகையில் இதுவும் வதந்தியாக இருக்கலாம் என சொல்கிறார்கள். சினிமா நடிகர்கள் தங்களுடன் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொள்வது சகஜமாகிவிட்டது. இதில் என்ன தவறு என்றும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications