விக்ரமும் பிரசாந்தும் என்ன உறவு? மறைக்கப்பட்ட அதிர்ச்சி ரகசியம்! தியாகராஜன் தங்கை கணவரா இந்த பிரபலம்
வேலூர்: வயதாகிவிட்ட பிறகு, ஒருசில படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார் விக்ரமின் அப்பா.. தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகவே அவர் பயன்படுத்தி கொண்டார்.. தில், கில்லி, திருப்பாச்சி, திருட்டு பயலே படங்களில் குணச்சித்திர வேடங்களில் நன்றாகவே நடித்திருந்தார். எனினும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை" என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரமின் அப்பா பெயர் நடிகர் வினோத் ராஜ்.. இவர் கில்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார்.. தமிழிலும் திருப்பாச்சி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.. இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கன்னட நடிகராகவும் வினோத்ராஜ் விளங்கினார்.. அம்பரீஷ், அர்ஜூன் சர்ஜா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடன கலைஞர் பாடகராகவும் விளங்கியதுடன், டான்ஸ் கிங் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.. கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்..
விக்ரமின் பேச்சு
இந்நிலையில், Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், வினோத் ராஜ் பற்றி விரிவாக பேசியிருக்கிறார்.. அதில், "நடிகர் விக்ரமின் அப்பாவும் ஒரு நடிகர்தான். ஆனால் அவ்வளவாக பிரபலமாகவில்லை..
7 வருடங்களுக்கு முன்பு விக்ரமின் அப்பா இறந்துவிட்டார்.. ஆனால் ஒரு நிறைவேறாத ஆசையுடன் இறந்துவிட்டார்.
விக்ரம் குடும்பத்தினர் ராமநாதபுரம் பரமக்குடியில் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்.. கட்டுப்பாடான குடும்பத்தில் இருந்து, பள்ளியிலேயே கலை ஆர்வம் காரணமாக சினிமாவுக்கு வந்தவர்.. ஆரம்பத்தில் நாடகங்களில் நடிக்க முயற்சி செய்து, படிப்படியாக முன்னேறியவர்..
நடிகர் தியாகராஜன்
அப்போது நடிகர் தியாகராஜன், திரைப்படங்களின் ஆடியோ உரிமை சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்து கொண்டிருந்தார்.. ஆடியோ விஷயங்களில் தியாகராஜன் அத்துப்படி.. இளையராஜாவை முதன்முதலில் வெளிநாட்டுக்கு அழைத்து சென்றதே தியாகராஜன்தான்.. அதற்கு பிறகுதான் சினிமாவில் நடிக்க வந்தார் தியாகராஜன்..
தியாகராஜனும், விக்ரமின் அப்பாவும் சினிமாவில் சேர்ந்திருந்தபோது நண்பர்களாக இருந்தவர்கள்.. அப்போது, தியாகராஜனின் தங்கையை விரும்பி திருமணம் செய்து கொண்டார் விக்ரமின் அப்பா.. நட்பாக பழகிவிட்டு, திடீரென தன்னுடைய தங்கையை திருமணம் செய்து கொண்டதால் தியாகராஜனுக்கு வந்த கோபம்தான் அது.. எனினும் அந்த கோபத்தை எங்குமே இரு தரப்பினரும் காட்டிக் கொள்ளவில்லை.
கீரி-பாம்பு உறவு
அப்போதிருந்தே இவர்களுக்குள் கீரி-பாம்பு போல உறவு தென்பாட்டாலும், உள்ளுக்குள் பாசம் இருக்கவே செய்யும்.. எனவே விக்ரம் குடும்பத்தினரும், பிரசாந்த் குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவர்..
தியாகராஜனின் மனைவி நன்றாக படித்தவர்.. அதனால்தான் விக்ரம் உட்பட தன்னுடைய பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார்.. ஜான் கென்னடி என்பதுதான் விக்ரமின் நிஜபெயர்.. கென்னடி மீது விக்ரமின் தாத்தாவுக்கு ஈர்ப்பு என்பதால் அந்த பெயரையே பேரனுக்கு வைத்தார்.. நண்பர்கள் அனவைருமே விக்ரமை, கென்னி என்றுதான் செல்லமாக கூப்பிடுவார்கள்.
நடிகர் பிரசாந்த் - விக்ரம்
தியாகராஜனை மேலோட்டமாக பார்த்தால் முரட்டுத்தனமாக தெரிவார்.. அவர் உண்மையிலேயே மிகவும் மென்மையானவர்.. பழகுவதற்கு இனிமையானவர்..
இவர்கள் இரு தரப்பு குடும்ப விழாக்களிலும் ஒருவரையொருவர் கடைசிவரை பார்க்க முடிவதில்லை. விக்ரமின் அப்பா இறந்தபோதுகூட, தியாகராஜன் குடும்பத்திலிருந்து வந்ததுபோல தெரியவில்லை.. பிரசாந்த் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் கிட்டத்தட்ட இவர்களின் கதைபோலவே இருக்கும். எனினும், விக்ரமின் பெற்றோர் கடைசிவரை சந்தோஷமாகவே வாழ்ந்துள்ளார்கள்..
விக்ரமின் அப்பா ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார்.. நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.. ஆனால், அப்படி படங்கள் எதுவுமே அமையவில்லை..
வயதாகிவிட்ட பிறகு, ஒருசில படங்களில் அப்பா வேடங்களில் நடித்தார். அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்புகளையும் சரியாகவே அவர் பயன்படுத்தி கொண்டார்.. தில், கில்லி, திருப்பாச்சி, திருட்டு பயலே படங்களில் குணச்சித்திர வேடங்களில் நன்றாகவே நடித்திருந்தார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications