Web Series: அறிவான் zee5 தமிழ் வெப் சீரீஸ்... அறியுமோ?
சென்னை: கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்திலும் எப்போது எடுத்த வெப் சீரிஸோ...அதை இப்போது ஒளிபரப்பத் துவங்கி இருக்கிறது zee5 ஓடிடி இயங்கு தளம்.
கடந்த வாரம் டிரெயிலர் வெளியாகி இருக்கிறது. தினமும் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. வெப் சீரிஸ் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்றும் zee5 ப்ரோமோ வெளியிட்டு வருகிறது.
என்று தணியும் இந்த சீரியல் மோகம் என்று வீட்டில் டிவி சீரியல் பார்க்கும் பெண்மணிகளிடம் வீட்டினர் கத்தி கத்தி கேட்ட காலம் போயி, என்று தணியும் இந்த வெப் சீரீஸ் மோகம் என்று பெண்கள் பிள்ளைகளிடம் கேட்கும் அளவுக்கு காலம் மாறிவிட்டது.

பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை
டிவியில் போட்ட படத்தையே போடுகிறார்கள்...இல்லையா சீரியல்கள், நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து ஒரே கஷ்டமப்பா என்கிற நிலை இப்போது. இதனால் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை என்று ஓடிடி இயங்கு தளங்களில் வெப் சீரீஸ் பார்ப்பது என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் முதல் சாய்சாக இருக்கிறது.

ஓடிடி இயங்கு தளங்கள்
ஓடிடி இயங்கு தளங்களில் மட்டும் என்னவோ நேற்றைக்கே ஆரம்பித்து இன்று ஒளிபரப்பப் படும் வெப் சீரிஸ் என்று இல்லை. இவைகளும் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு, ஒரு மூன்று மாதங்களில் படப்பிடிப்பு முடிந்தவைகள்தான்.

சரியான நேரம்
மே மாத கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட வெப் சீரீஸ்..ஓடிடி இயங்கு தளங்களுக்கு இப்போது செமையாக கைக்கொடுத்து வருகிறது. அவர்கள் திட்டமிட்டது ஒரு சதவிகிதம் லாபத்துக்கு என்றால், இப்போது இவர்களுக்கு வாய்த்து இருப்பதோ இரண்டு சதவிகிதம் லாபம் கொடுக்கும் காலம்.

அறிவான் வெப் சீரீஸ்
தொடர் கொலைகள் செய்யும் ஒரு கொலைகாரன் பற்றிய கதை..கிட்டத்தட்ட அவன் பைத்தியம் பிடித்தவன் போல இருக்கிறான். தெரியுதா, புரியுதான்னு நம்மையே கேட்கிறான். இந்த சீரீஸில் தெரிந்த முகம் என்று ஒருவரும் இல்லை. ஆனால், zee5 இயங்குதளம் அனைவரும் அறிந்ததே... அந்த தைரியத்தில் அறிவான் பார்க்கலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications