கை போட்டுக்கோங்க மாமா.. ரைட்ஸ் இருக்கு மாமா.. சிணுங்கிய அனு.. அதிர்ந்து நெளிந்த ரோஜா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் நதியா கெஸ்ட் ரோலில் வந்துட்டு போன பிறகு சீரியல் ரேட்டிங் ரொம்பவே மேல போயிருச்சாம். இன்னும் யாரை இப்படி இழுக்கலாம்னு வேற கதைக்குழு விவாதிச்சுக்கிட்டு வர்றாங்களாம்.

என்ன இருந்தாலும் நதியாவே இன்னும் ஒரு தடவை அல்லது ரெண்டு தடவை வரலாம்னும், அதுக்குப் பிறகு வேற யாரையாவது செம மாஸா இறக்கலாம்னும் கதைக்குழு தீர்மானிச்சு இருக்காங்களாம்.

இந்த நேரத்துல சீரியலுக்குள்ள போலாம்... நதியாவுக்காக கொஞ்சம் ஓவராகவே நடிச்சாலும், ஒருத்தரை ஒருத்தர் விரும்பறதை ரோஜா, அர்ஜுன் ரெண்டு பேருமே புரிஞ்சுதான் வச்சிருக்காங்க.

புரியலை ரோஜாவுக்கு

புரியலை ரோஜாவுக்கு

அர்ஜுன் ராஜாவிடம், அம்மா ஆசைப்பட்டு கேட்டாங்களே அது பத்தி என்ன ரோஜா நீ நினைக்கறேன்னு கேட்டும். ஆமாம் சார் இன்னும் ஒரு வருஷத்துல கேஸ் ஜெயிச்சு நான் ஆஸ்ரமத்துக்கு போன பிறகு நீங்க ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டு, அத்தை விரும்பின மாதிரி குழந்தை பெத்து குடுத்துருங்க சார்னு சொல்றா ரோஜா. மரமண்டை... எவ்ளோ சொல்லியும் புரியலையேன்னு அர்ஜுன் புலம்பறான்.

செல்ஃபி எடுக்கலாமா?

செல்ஃபி எடுக்கலாமா?

அர்ஜுன் அத்தை பொண்ணு அனு வந்து, மாமா புது செல்போன் வாங்கி இருக்கேன். முதன்முதல்ல உங்க கூடத்தான் செல்ஃபி எடுக்கணும்னு வந்திருக்கேன் மாமா எடுக்கலாமான்னு கேட்கறா. ஏன் பாட்டி கூட எடுக்கலாம், அம்மா கூட எடுக்கலாம்.. போய் எடுத்துக்கோ அனுன்னு சொல்றான்.

எடுத்தா ஸ்பெஷல்

எடுத்தா ஸ்பெஷல்

உங்க கூட எடுத்தாதான் மாமா ஸ்பெஷல்னு அனு சொல்ல , அவங்க கூட எடுத்தா அது ஆர்டினரியான்னு கேட்கறான். மாமா உங்க லா பாயிண்ட்டெல்லாம் எனக்கு தெரியாது. வாங்க மாமான்னு கூப்பிட, அப்போதான் துணி காய வைக்க ரோஜா மேலே வர்றா.

இருக்குமே...

இருக்குமே...

பொண்ணுங்களுக்கு ஆசைப்பட்டவன் வேற ஒருத்தியோட பேசினாலே பொஸசிவ்னஸ் இருக்கும், இப்போ ரோஜாவுக்கு என் மேல காதல் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுப்போம்னு டக்குன்னு முடிவெடுக்கறான் அர்ஜுன். அனு.. செல்ஃபி எடுக்கணும்னா நெருங்கி நிக்கணும், இவளோ தூரத்துல நிக்க கூடாதுன்னு சொல்றான்.அவ கிட்ட வர்றா.

ஒருத்தர் உரசி

ஒருத்தர் உரசி

இப்படி இல்லை அனு.. ஒருத்தர் மேல ஒருத்தர் உரசிகிட்டு நிக்கணும்னு சொல்றான். மாமா போதுமான்னு கிட்ட வந்து உரசி நிக்கறா அனு. இங்கே ரோஜாவுக்கு முகத்துல கோபம் பொங்கி வழியுது. பக்கெட் கம்பியை அழுத்தி திருகி கோவத்தை காமிக்கறா.

கை போடலாமா

கை போடலாமா

அனு உன் மேல கை போட்டுக்கலாமான்னு கேட்கறான் அர்ஜுன். மாமா போட்டுக்கோங்க மாமா.. நான் உங்க அத்தை பொண்ணு, என் மேல உங்களுக்கு எல்லா ரைட்ஸும் இருக்குன்னு சொல்றா அனு. இவன் அவள் மேல் கை போட்டு ரோஜாவை ஓரக்கண்ணால் பார்த்து, இப்படி எடுத்தாதான் அனு பார்க்கறவங்களுக்கு சும்மா ஜிவ்வுன்னு இருக்கும்னு சொல்றான்.

ஆங்கிள்

ஆங்கிள்

வேற ஆங்கிள்ல எடுக்கலாம் மாமா.. ஒரே மாதிரி எடுத்தா நல்ல இருக்காதுன்னு மாத்தி எடுக்க, ஆத்திரம் தாங்காத ரோஜா பாக்கெட்டை கீழே போடறா. அட ரோஜா வந்துட்டியா.. உன்னைத்தான் எதிர்பார்த்தேன். செல்ஃபி எடுத்து டயர்டா இருக்கு. ஓடி போய் ஒரு டீ போட்டுக்கிட்டு வான்னு சொல்றான்.

அவள் போன பிறகு அனுவை எனக்கு நிறைய வேலை இருக்கு நீ போன்னு அனுப்பிட்டு ரொம்ப ஓவரா பண்ணிட்டோமோன்னு நினைக்கறான். மறுபக்கம் மாடிப் படியில் ரோஜாவுக்கு ஒரு இடி கொடுத்துட்டு இறங்கறா அனு. நல்லாத்தாய்யா போகுது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+