இலங்கைப் பெண்ணோடு அந்த மாதிரி உண்மைதான்..ஆனால்?திடீர் கட்சி மாறிய அர்ணவ்..பரபரப்பான குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் அர்ணவ் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் தனக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தன்னுடைய விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
அதில் இலங்கைப் பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாகி, அதை அபார்ஷன் செய்ததாக திவ்யா சொன்ன குற்றச்சாட்டுகளை அர்ணவ் மறுத்திருக்கிறார்.
இலங்கை பெண்ணை தான் காதலித்தது உண்மைதான். ஆனால் நான் கர்ப்பமாகி அபார்ஷன் செய்யவில்லை என்று அர்ணவ் கூறி இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்ணவ் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய பிரச்சனைகளை குறித்து சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
திவ்யா கர்ப்பமாக இருக்கும் தன்னை அர்ணவை அடித்து துன்புறுத்தினார் என்று கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக அர்ணவ் ஜெயிலில் சில நாட்கள் இருந்து விட்டு வெளியே வந்து தற்போது மீண்டும் விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர்களுடைய குடும்பப் பிரச்சனை சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
அர்ணவ் ஜெயிலில் இருக்கும் போது தான் எனக்கு அவரைப் பற்றிய பல உண்மைகள் தெரிய வந்தது என்று திவ்யா சில தினங்களுக்கு முன்பு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் பல குற்றச்சாட்டுகளை அர்ணவ் மீது வைத்திருந்தார். அதில் இலங்கைப் பெண் ஒருவரை அர்ணவ் ஜிம்முக்கு போகும்போது சந்தித்து இருக்கிறார். பிறகு அவர்களுக்குள் காதல் வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பொண்ணோட வீட்டிலேயே அர்ணவ் தங்கி இருந்திருக்கிறார்.
அப்போ அந்த பொண்ணோட வீட்டுலையும் நான் இவங்கள தான் கல்யாணம் பண்ண போறேன் என்று நம்புற மாதிரியே பேசி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அந்த பொண்ணு அர்ணவால கர்ப்பமாகிடிச்சி என்றும் பிறகு அந்த கர்ப்பத்தை கலைத்துவிட்டு அந்த பெண்ணை விட்டுவிட்டு அர்ணவ் வந்து விட்டார் என்றும் அதில் திவ்யா கூறி இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து இன்று செய்தி சேனல் ஒன்றில் பேட்டி அளித்த அர்ணவ் நான் செய்யாத குற்றங்களை எல்லாம் திவ்யா சொல்லிட்டே போறாங்க. அதுக்கு எல்லாம் ஆதாரம் இருந்தால் அதைக் கோர்ட்டில் வந்து காட்டட்டும். அவங்க சொல்றது எல்லாமே பொய், இப்படி என் மேல பழி போடுவதால் அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதோ தெரியல.
இலங்கை பெண் என்னுடைய எக்ஸ் லவ்வர் தான். அவங்களும் நானும் லவ் பண்ணினோம். ஆனா அவங்க குழந்தையை நான் கலைக்கல. இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு இதுக்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும். நான் திவ்யா பற்றி தப்பா சொல்ல போறது கிடையாது. அவங்க பெருசா தப்பு பண்றாங்க அதை மறைக்க தான் என்னை மாட்டி விட பாக்குறாங்க. சிலருடைய பேச்சை கேட்டுகிட்டு இந்த மாதிரி தப்பான வேலைகளை எல்லாம் திவ்யா பண்ணிட்டு இருக்காங்க.

திவ்யா பற்றிய பல ஆதாரங்கள் என்கிட்ட இருக்கு அதை எல்லாம் நான் கோர்ட்டில் காட்டுகிறேன். திவ்யா காட்டுற மாதிரி ஸ்கிரீன்ஷாட் என்னால் ரெடி பண்ண முடியும். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். நான் கோர்ட்டில் உரிய ஆதாரத்தோடு பேச போறேன். இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம் ஈஸ்வரன் தான். அவன் சொல்லித்தான் திவ்யா எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கா.
இதுக்கு மேலயும் அவங்க ஏதாவது பண்ணிட்டு இருந்தா நானும் சும்மா விடமாட்டேன். உண்மைகளை உடைக்க வேண்டி இருக்கும். அவ இனியாவது குழந்தைகளை யோசித்து நடக்கணும். நான் அவ குழந்தைகளுக்காக தான் அவளை பற்றிய உண்மைகளை எல்லாம் வெளியே பேசாம இருக்கேன் ஆனா எப்பவும் இப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது என்று கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications