அர்னவ் நிலைமை அவ்வளவுதானா? கையில் குழந்தையோடு மனைவி வெளியிட்ட வீடியோ.. சப்போர்ட்டுக்கு வரும் ரசிகர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் அர்னவ் வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த அர்னவ் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதரை பிரிந்திருக்கும் செய்தி பலருக்கும் தெரிந்திருக்கும். ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் திருமணம் செய்து கொண்ட சில மதங்களில் பிரிந்துவிட்டனர்.

அதற்கு காரணம் செல்லமா சீரியலில் கதாநாயகியாக நடித்த அன்ஷிதா தான் என்று திவ்யா குற்றசாட்டு வைத்திருந்தார். அன்ஷிதாவால் தன்னுடைய வீட்டில் பிரச்சனை ஏற்படுவதாகவும் அதனால் அர்னவ் தன்னை அடித்து சித்திரவதை செய்கிறார் என்று கூறியிருந்தார். தான் கர்ப்பமாக இருக்கும் போது தன்னுடைய வயிற்றில் எட்டி உதைத்ததாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகாருக்காக அர்னவ் ஜெயிலுக்கு போயிட்டு வந்திருந்தார்.
அதே நேரத்தில் தற்போது அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆனால் நிகழ்ச்சியில் தாங்கள் ஏற்கனவே தெரியும் என்பது போல வெளிப்படையாக இவர்கள் காட்டிக்கொள்ளவில்லை. முதல் வாரமே ஓபன் நாமினேஷன் செய்யும்போது அன்ஷிதாவை நாமினேஷன் செய்திருந்தார். இது எல்லாரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது.
இருவரும் தங்களுக்கு வெளியே இருக்கும் கெட்ட பெயரை போக்குவதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக சொல்லியிருந்தனர். ஆனாலும் இரண்டாவது வாரத்தில் நேற்று அர்னவ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் வெளியேறிய பிறகு இன்று திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தையோடு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அதில் கணவர் தன்னுடைய கன்னத்தில் ஓங்கி அடிப்பது போலவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திவ்யா திருப்பி அடிப்பது போலவும் இருக்கிறது.. நீ அடிச்சத வாங்கிக்கிற பொண்ணு நான் இல்ல திருப்பி தருவேன்.. என்று மிரட்டும் வசனம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து இனி என்னடா பண்ணுவ..? என்று அந்த வீடியோவில் திவ்யா தன்னுடைய குழந்தையின் தோலில் தட்டிக் கொடுத்த அப்படியே கெத்தாக பேசியிருக்கிறார்.
இந்த ரீல்ஸ் வீடியோ இவர் இந்த நேரத்தில் வெளியிட்டு இருக்கும் நிலையில் இது அதிகமான கமெண்ட்களை பெற்றி வருகிறது. அதில் அதிகமான ரசிகர்கள் அர்னவை திட்டி வருகிறார்கள். மேலும் திவ்யா ஸ்ரீதருக்கு அவர் செய்த பாவம் காரணமாக தான் அர்னவுடைய வாழ்க்கையில் எல்லோரும் அவரை ஏமாற்றுகிறார்கள்.
அர்னவ் யாருக்காகவும் உண்மையாக இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அர்னவ் தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவரை விட்டு பிரிந்த நிலையில் அவருடைய குழந்தையை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் குழந்தை மீது அதிகமாக பாசம் இருப்பதாகவும், பெண்கள் மீது தனக்கு அதிகமான மரியாதை இருப்பதாகவும் காட்டிக்கொண்டார். இதுவும் அவரை பற்றி மக்கள் அதிகமாக விமர்சிக்க காரணமாக இருந்தது.












Click it and Unblock the Notifications