மதன் பாபு மியூசிக் ட்ரூப்ல ஏ ஆர். ரஹ்மான் கீ போர்ட் வாசிச்சாரா?.. வாவ்...!
சென்னை: சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் நடிகர் மதன் பாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் தனது குடும்பமே இசைக் குடும்பம்னு சொன்னார். அப்போது சொந்தமாக ஒரு மியூசிக் ட்ரூப் வச்சு நடத்திக்கிட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மனைவி நல்லா பாடுவார். மகன்,மகள் ரெண்டு பேருமே சினிமா பாடல்கள் பாடி உள்ளனர். இமான் இசை, மற்றும் ஸ்ரீகாந்த் தேவா இசையில் இவர்கள் ரெண்டு பேரும் பாடி உள்ளனர் என்றும் கூறினார்.
கிரி படத்தில் வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்து வீட்டின் உள்ளே போக காலடி கூட எடுத்து வைக்க முடியாதபடி வடிவேலுவால் வரும் பிரச்சனைகளை நினைவு கூர்ந்து சிரித்தார்.
சுந்தர் சி சார் நல்ல காமெடி பட இயக்குநர். அவர் சொல்றதை அப்படியே செய்தாலும் இல்லை நாம் கொஞ்சம் மெருகேற்றி செய்தாலும் காமெடி ரொம்ப அழகா மக்கள்கிட்ட ரீச் ஆகும்னு சொன்னார்.
தெனாலி படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரவிக்குமார் சார்தான்,என்னோட ட்ரூப்ல ரஹ்மான் சார் கீபோர்டு வாசிச்சதா சொன்னார். எனக்கு கூட நினைவில்லை.

ரஹ்மான் சார் ரவிக்குமார் சார்கிட்ட சிரிச்சுகிட்டே இருக்காரே இவர் ட்ரூப்ல நான் கீபோர்டு வாசிச்சு இருக்கேன்னு சொன்னாராம். எனக்கு தெரிஞ்சு இருந்தா நானே கூட இதை மேடையில சொல்லி இருக்கமாட்டேன்னு சொன்னார்.
அவர் என் ட்ரூப்ல கீபோர்டு வாசிச்சது என் பாக்கியம்னு சொல்லி சிரித்தார் மதன்பாப். எல்லாரும் எப்பவும் சிரிச்சுகிட்டே இருந்தா நல்லது. ஆனா,நான் சிரிச்சுகிட்டே இருந்தா எனக்கு பணம் வரும்னு தன் டிரேட் மார்க் சிரிப்போடு சொல்லிவிட்டு, மீண்டு அதே சிரிப்பை உதிர்த்து டாடா சொன்னார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications