சுலேகா எதுக்கு காப்பை கழட்டினா... இப்போ பாருங்க அருந்ததி அவளுக்குள்ள...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் திகில் தொடர் அருந்ததி.

திகில் தொடர் கூடவே பக்தி சீரியல் மாதிரி ஒளிபரப்பாகிட்டு இருக்கு. பேய் சீரியலில் முருகன் பக்தர்கள்...பழைய படங்களில் இது உண்டு இது சீரியலின் பேய் கதைக்கு புதுசு.

குடும்பத்தில் அனைவரும் கையில் ருத்திராட்ச காப்பு அணிந்திருக்க வேண்டும் . அப்போதுதான் குடும்பத்தினரை தீய சக்தி அண்டாது என்பது குருஜியின் அறிவுரை.

கையில் காப்பு

கையில் காப்பு

அமெரிக்காவிலிருந்து சுலேகாவை கல்யாணம் செய்துக்க சண்முகம் அவளை அழைச்சுட்டு வர்றான்.சுலேகாவும் இனி நம்ம குடும்பத்தை சேர்ந்தவன்னு சொல்லி அவ கையிலயும் காப்பை அணிவிச்சு விடறாங்க ஈஸ்வரி அம்மா.

காப்பைத் தூக்கி

காப்பைத் தூக்கி

சுலேகாவுக்கு இந்த காப்பு பிடிக்கலை..கையில் அது எப்பபோதும் உறுத்தலா இருக்கு.அதனால அவ காப்பை கழற்றித் தூக்கி போட்டுடறா. இதனால கிணற்றிலிருந்து மந்திரம் சொல்பவரையும் தாண்டி கெட்ட ஆவி வீட்டுக்குள்ள வந்து சுலேகா உடம்புக்குள்ள புகுந்துருது.

பேய் ஆவி

பேய் ஆவி

திகில் தொடர்.. பேய்.. ஆவின்னு எல்லாரும் எதிர்பார்த்து காத்திருக்க இப்போ அருந்ததி பேய் வெளியில் வந்து சுலேகா உடம்புக்குள்ள புகுந்துக்குது.

தெய்வானையா

தெய்வானையா

இப்போ சுலேகா உடம்புக்குள்ள கெட்ட ஆவி புகுந்திருக்க சண்முகத்துக்கு சுலேகாவுடன் நிச்சயதார்த்தம் நடக்குமா.. இல்லை முருக பக்தை தெய்வானையுடன் சண்முகத்துக்கு நிச்சயதார்த்தம் நடக்குமான்னு கேள்வி வந்திருக்கு.

என்ன காரணம்

என்ன காரணம்

சண்முகத்துடன் தெய்வானையை சேர்க்க ஒரு காரணமிருக்கு,.அருந்ததி ப்ரமோவில் சண்முகத்துக்கு தெய்வானையுடன்தான் முதலிரவு ஏற்பாடு பண்ணி இருக்காங்க.அப்போ அருந்ததி பேய் சண்முகத்திடம் இருந்து வருது. இதுதான் தெய்வானையை இதில் இணைக்க காரணம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+