அருந்ததி.. ஆரம்பமே படு மிரட்டல்... கொஞ்சம் அசத்தலும்!
சென்னை: சன் டிவியின் அருந்ததி திகில் தொடர் நேற்று இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாச்சு. ஆரம்பமே படு மிரட்டலாவும், கொஞ்சம் அசத்தலாவும் இருந்துச்சு.
தெலுங்கு டப்பிங் சீரியலோன்னு நினைச்சா அதுதான் இல்லை. தமிழில் நிறைய பட்ஜெட்டில் உருவாகி இருக்கு அருந்ததி.
தெரிந்த நடிகர்கள், நடிகைகள் என்று பார்த்தால் பூவிலங்கு மோகன், ஜெ.லலிதா, நடிகை சோனியா, அர்ச்சனா, சுகாசினி என்று இருக்கிறார்கள்.

ரெண்டு கண்ணு
சீரியலின் ஆரம்பத்தில் தலையை விரிச்சு போட்டுக்கிட்டு முகத்தை மறைச்சுக்கிட்டு நட்டு நடு இரவில் தெருவில் ஒரு பொண்ணு ஓடி வர்றா... நிஜமா அவளின் ரெண்டு கண்ணு மட்டும்தான் தெரியுது.

கிணறு அருகில்
அவளை முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துரத்தி வருது. பாவம் அவளும் ஓடறா.. .துரத்தறாங்க. ஒரு கிணறு இருக்கு. அதை நெருங்கி அவளை அந்த இடத்தில் கார்னர் பண்ணிடறாங்க.

தேள்
வேண்டாம்.. வேண்டாம்னு சொல்றா. ஒருத்தன் தேளை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கான் ...அது மட்டும்தான் இவளுக்கு தெரியுது (பேயா மாறியதும் ஆளைக் கண்டுபிடிக்க அடையாளம் வேணுமில்லையா, அதுக்குத்தான் இந்த சீன் வச்சிருக்காங்க போல). அந்த கிணற்றில் அவளை அந்த கும்பல் தள்ளிடறாங்க.

முருகன் மலேசியா
கட்... அந்த ஊரில் பணக்கார அம்மா ஒருத்தங்க முருக பக்தை. அவங்க மலேசியாவில் இருக்கற மாதிரி தண்டாயுதபாணி சிலை ஒன்றை பிரதிஷ்டை பன்றாங்க ஊரே பெரும் விழாவா கொண்டாடுது.

ஆடி கிருத்திகை
ஆடி கிருத்திகை ஊரே கூடி இருக்க, பணக்கார குடும்பமும் கிளம்பி போறாங்க. தெய்வானைன்னு ஒரு அழகான பொண்ணு.இந்த பொண்ணு குழந்தையிலிருந்து அந்த முருகன் கோயிலில் வளர்ந்தவளாம்.

துஷ்ட ஆன்மா
பணக்கார குடும்பத்துக்கு துஷ்ட ஆன்மாவின் மூலம் கெடுதல் நடக்கும் என்பதால் கையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருத்திராட்ச காப்பு அணிந்து இருக்கணும்.எல்லார் கையிலும் அது இருக்கு.

முருகன் முத்தமிழ்
முத்தமிழ் கடவுள் முருகனின் கிருத்திகை கொண்டாட்டங்கள் ரொம்ப நல்லாருக்கு. பார்க்க பரவசமாவும் இருக்கு. ராத்திரி நேரத்தில் கருப்பா மேகம் போல உருண்டு திரண்டு கண்களை மட்டும் காமிக்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.. ஆனாலும் காஞ்சனா, அரண்மனை படத்திலிருந்து எத்தனை சீனை உருவப் போறாங்கன்னு எதிர்பார்ப்பையும் தூண்டி விட்டிருக்கு!
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications