Arundhathi serial: ஆறு பேர் தீயில் கருகி செத்த வீடு திருமண மண்டபமாமே! நல்ல வேடிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் சண்முகத்தின் மீது பேய் அருந்ததிக்கு ஆசை வந்துருது. அவனை கல்யாணம் செய்துகிட்டு அவனோட வாழணும் என்றும் ஆசை. இது எப்படி சாத்தியமாகும்?

ஆனால், அருந்ததி தெய்வானையிடம் போயி நடிக்கிறாள். என்னை சீரழிச்சவனை நானே என் கையால கொல்லணும்னு கேட்டேன்.. நீங்க போலீஸ்ல ஒப்படைச்சுட்டீங்க. ஆனால், எனக்கு ஒரு ஆசை இருக்குன்னு சொல்றா.

என்ன ஆசைன்னு தெய்வானை கேட்க, எனக்கு எல்லா பெண்களையும் போல நானும் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைன்னு சொல்றா. என்ன அருந்ததி..பேயை போயி கல்யாணம் செய்துக்க யாரு சம்மதிப்பான்னு கேட்கிறாள் தெய்வானை.

புருஷன் சண்முகம்

புருஷன் சண்முகம்

யாரையாவது எதுக்கு கேட்கணும் தெய்வானை. உன் புருஷன் சண்முகத்துக்குத்தான் என்னை பத்தி நல்லா தெரியும்.. அதனால, சண்முகத்தை எனக்கு கல்யாணம் செய்து வை தெய்வானை. கல்யாணம் முடிஞ்ச உடனே என் ஆத்மா சாந்தி அடைஞ்சுரும். அப்புறம் உங்களை நான் தொந்திரவு செய்யாம போயிருவேன்னு சொல்றா அருந்ததி.

உதவி உனக்கு

உதவி உனக்கு

அருந்ததி உனக்கு உதவி செய்யணும்னுதான் நான் நினைக்கிறேன்.ஆனால், அவர்கிட்டே எப்படி நான் இதைப்பத்தி பேசுவேன். அவர் ஒத்துக்குவாரான்னு கேட்கிறாள். நீதான் பேசி சண்முகத்துக்கு புரிய வைக்கணும். ப்ளீஸ் தெய்வானை இந்த ஆசையை மட்டும் நிறைவேத்தி குடுத்துடுன்னு சொல்றா. ஒரு வழியா சண்முகமும் ஒப்புக்கொள்கிறான்.

கல்யாண மண்டபம்

கல்யாண மண்டபம்

இப்போ கிளம்பினால் தாங்க அங்கே போயி சேர முடியும்.எப்படியும் ராத்திரி 12 மணிக்குள்ள போகணும்னு சொல்றா. ஏன் பக்கத்துல எங்கேயும் கல்யாணம் வச்சு இருக்க கூடாதான்னு கேட்கிறான் சண்முகம். இங்கே அது மாதிரி கல்யாண மண்டபம் கிடைக்கலையாங்கன்னு தெய்வானை சீரியஸாக பேச, சண்முகம் பேய் கூட கல்யாணம் கல்யாண மண்டபமான்னு சிரிக்கிறான்.

எரிஞ்ச வீடு

எரிஞ்ச வீடு

சுடுகாட்டுக்குள்ள எரிஞ்ச வீடு ஒண்ணு இருக்கு. இந்த வீடுதாங்க கல்யாண மண்டபம்.இந்த வீட்டில் குடும்ப தகராறு காரணமா ஆறு பேர் வீட்டுக்குள்ள வச்சு எரிச்சு கொல்லப்பட்டாங்களாம். அதனால்தாங்க இந்த வீட்டில் கல்யாணம் வச்சு இருக்கா அருந்ததின்னு சொல்றா.

கருப்பு உடை, வவ்வால், தேள், பாம்பு, சாம்பல், கருப்பு மாலை என்று கல்யாணத்துக்கு தேவையான பொருட்களைப்பார்த்தால் தலை சுத்துது சண்முகத்துக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+