Arundhathi Serial: இந்த வருடம் தீபாவளிக்கு அருந்ததி பட்டாசும் உண்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சி சானல்களில் சீரியல் குடும்பங்கள் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தை தங்களது செட் அல்லது கல்யாண மண்டபம் என்று ஏற்பாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.

அதை சானல்களில் முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லைவாக பகிர்ந்தும் வருகின்றனர்.

சன் டிவியின் அருந்ததி சீரியல் குடும்பம் அருந்ததி பட்டாசோடு தீபாவளியை அட்வான்ஸாக கொண்டாடி மகிழ்ந்து அதை லைவாகவும் பகிர்ந்து உள்ளார்கள்.

புதுசு இது புதுசு

புதுசு இது புதுசு

எதாவது ஒரு சீரியல் ஹிட்டாகி அது மக்கள் மனதில் இடம்பெற்று விட்டால், அதன் பெயரில் புடவை, மாடர்ன் உடைகள் என்று சந்தையில் உலா வருவது வழக்கம். இப்போது சன் டிவியில் பரபரப்பாக இருக்கும் திகில் சீரியல் அதோடு அருந்ததி பேய் சீரியல் என்று குழந்தைகளின் உள்ளம் கவர்ந்து இருப்பது அருந்ததி சீரியல். இந்த சீரியலின் பெயரில் மார்க்கெட்டில் அருந்ததி பட்டாசு என்று விற்பனைக்கு வெளியாகி உள்ளது.

அருந்ததி குடும்பம்

அருந்ததி குடும்பம்

அருந்ததி பட்டாசுடன் தீபாவளியை கொண்டாட அருந்ததி சீரியல் குடும்பம் தயாராகி வருவதை தங்களது சமூக வலைத் தளங்களில் நேரலையில் காண்பித்தர்கள். அருந்ததி, தெய்வானை, ஈஸ்வரி அம்மா, அவரின் தங்கையாக நடிக்கும் தேவிப்பிரியா, சண்முகம், சரவணன் என்று எல்லாரும் வியூவர்ஸுக்கு தீபாவளி வாழத்துக்கள் கூறினார்கள்.

தீபாவளியை பாதுகாப்பாக

தீபாவளியை பாதுகாப்பாக

இளமையான ஈஸ்வரி அம்மா, சண்முகம், தெய்வானை என்று யாருக்கும் தமிழ் தெரியவில்லை.தேவிப்பிரியா சொல்லிக் கொடுத்தார். அருந்ததி நன்றாக தமிழ் பேசியவர் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து ஜாலியாக தீபாவளியை கொண்டாடுங்கள் என்று கூறினார்.

எங்கே கோவை சரளா?

எங்கே கோவை சரளா?

செட்டில் கோவை சரளாவை காணலையே என்று கேட்டபோது... தீபாவளி கொண்டாட கோவைக்கு போயிருக்காங்க.கட்டாயம் திரும்பவும் சீரியலுக்கு வருவாங்க என்று அனைவரும் கூறினார்கள். சொல்லமுடியாது.. கொஞ்சம் டல்லடிக்கும் இந்த சீரியலை ரேட்டிங் கொண்டு வர குழந்தைகளின் அரை பரீட்சி விடுமுறையில் கோவை சரளா மீண்டும் அருந்ததி சீரியலில் கெஸ்ட் ரோல் பண்ண வாய்ப்பு இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+