Arundhathi Serial: சாதாரண மனுஷியை பேய் புடிச்சு இப்படி ஆட்டுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் ஆரம்பத்தில் திகில் தொடர்,அருந்ததி பேய் என்று பயம் காண்பிக்க ஒளிபரப்பானது.போக போக திகில் குறைந்து நகைச்சுவை சீரியல் பார்ப்பது போல உணர்வை ஏற்படுத்துகிறது.

கோவை சரளா சில எபிசோட்களில் வந்துட்டு போனாங்க. அப்போது, அருந்ததி சீரியல் பற்றிய எதிர்பார்ப்பு கூடித்தான் இருந்தது. ஆனால், இப்போதைக்கு ரேட்டிங்கில் இடம் பிடிக்க முடியாமல் ஒரு திகில் சீரியல் என்கிற பெயரில் ஒளிபரப்பாகிட்டு வருது.

முருகன் கோயிலை மிக பிரமாண்டமாக காண்பித்து ஆரம்பத்தில் கொஞ்சம் பக்தியை கொடுத்து இருந்தார்கள். பிறகு அந்த கோயிலையே சீரியலில் காணோம்.

அருந்ததி எதிர்பார்ப்பு

அருந்ததி எதிர்பார்ப்பு

மக்கள் திகில் தொடர் பேய் சீரியல் என்று ஆசையாக எதிர்பார்த்து சீரியலை தொடந்து கவனித்து வருகிறார்கள். பேய் சண்முகத்தின் மேல் ஆசைப்படுவது கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்பது, அருந்ததி ஆவி சாந்தி அடையாமல் மனித வாழ்க்கைக்கு ஆசைப்படுவது என்று காண்பித்து வருகிறார்கள்.

சாதாரண மனுஷி

சாதாரண மனுஷி

அருந்ததி பேயின் சக்திக்கு முன்னால் சாதாரண மனுஷி என்ன செய்ய முடியும் என்பது போல, அருந்ததி பாவமாக அருந்ததியிடம் மாட்டிக்கொண்டு விழிக்கிறாள். இவளது புருஷன் சண்முகத்தை அருந்ததி பேய் ஆசையாய் கேட்கிறது என்று அவளுக்கு கல்யாணம் செய்து வைத்து இப்போது பேயிடம் மாட்டிக்கொள்கிறாள்.

எனக்கு மட்டும்

எனக்கு மட்டும்

பேய் கல்யாணம் முடிந்ததும் விழித்துக் கொண்டு, சண்முகம் என் புருஷன்தான், எனக்கு மட்டும்தான்னு தெய்வானையிடம் போட்டி போடுகிறது. அதை எரிப்பது இதை தள்ளி விடுவது என்று சித்து விளையாட்டுக்கள் காண்பித்து தெய்வானைய பயமுறுத்தி வருகிறது., தெய்வானைதான் அருந்ததிப் பேய் பற்றி யாருக்கும் சொல்லாமல் இருக்கிறாள் என்று பார்த்தால் சண்முகமும் ரகசியம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

அருந்ததி தெய்வானை

அருந்ததி தெய்வானை

வீட்டுக்கு வரும் தீய சக்தியை எதிர்கொள்ளும், விரட்டி அடிக்கும் திறன் தெய்வானையிடம்தான் உள்ளது. அவளை சண்முகத்துக்கு கல்யாணம் செய்து வைன்னு சொன்ன நம்பூதிரி அம்மா இப்போது இல்லை. இந்த நேரத்தில் தெய்வானை என்ன செய்து சாதாரண மனுஷியாக தன்னையும்,, தனது கணவன் சண்முகத்தையும் காப்பாத்திக்க போகிறாள் என்கிற ஆர்வம் மக்கள் மனதில் ஏற்படும்படி சீரியலை கொண்டு போகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+