Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Arundhathi Serial:அருந்ததி சண்முகத்துக்கு சிவப்பு பல்ப்.. தெய்வானைக்கு மஞ்சள் பல்பபுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி திகில் சீரியல் இன்னும் கொஞ்சம் திகில் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போல தோன்றுகிறது. என்ன செய்வது... கொஞ்சம் திகில் போதாமல்தான் இருக்கிறது.

அருந்ததியின் ஆவியை பிடிச்சு பாட்டிலில் அடைச்சுடறாங்க தீயவர்கள்.ஆனால், அருந்ததியை வெளியில் கொண்டு வந்தால்தான் பல உண்மைகள் தெரியும் என்று, பாட்டிலோடு அருந்ததியை ஒரு சாமியாரிடம் எடுத்து செல்கிறார்கள் தெய்வானையும், அவள் புருஷன் சண்முகமும்.

அருந்ததில் வெளியில் வர வேண்டும் என்றால் அவளுக்கு ஒரு உடம்பு வேண்டும் என்று அந்த சாமியார் கேட்க, தெய்வானையின் உடலை தர மறுக்கிறான் சண்முகம்.

புருஷனுக்கு தெரியாமல்

புருஷனுக்கு தெரியாமல்

புருஷனுக்கு தெரியாமல் அருந்ததியின் ஆவிக்கு தனது உடலைத் தர சம்மதிக்கிறாள் தெய்வானை. அருந்ததியும் தெய்வானையின் உடலுக்குள்புகுந்து கொண்டு வீட்டுக்கு வரும்போது, தெய்வானை என்று தனது மனைவியிடம் சண்முகம் ரொமான்ஸ் செய்வதில் உடலுக்குள் இருக்கும் அருந்ததி சண்முகத்தின் மேல் ஆசை கொள்கிறாள். தெய்வானை அருந்ததியாக மாறியதில், வீட்டில் இருக்கும் எந்த புடவையையும் தெய்வானைக்கு பிடிக்கவில்லை.

புருஷனுடன் ஷாப்பிங்

புருஷனுடன் ஷாப்பிங்

ஒரு புடவை கூட பிடிக்கலை மாமா...எனக்கு புதுசா டிரஸ் வாங்கணும் போல இருக்குன்னு சொல்றா .அவன் உடனே ஷாப்பிங் அழைச்சுட்டு போயி, அழகழகான மாடர்ன் டிரஸ் வாங்கித் தர்றான். அவள் பேசும் ஆங்கிலத்தை ரசிக்கிறான். அவள்தான் இப்போது தெய்வானை இல்லையே.. அருந்ததியாக இருந்து சண்முகத்தை ரசிக்கிறாள்.

பானை ஆசை

பானை ஆசை

பானை செய்து பார்க்கணும்னு ஆசையா இருக்குதுன்னு அவள் சொல்ல, அவனும் பானை செய்ப்பவரின் அனுமதியோடு மிக ரொமான்ஸாக பண்ணிக்கொண்டே பானை செய்ய கத்து கொடுக்கிறான். அவளும் அருந்ததியாக இருந்து ரசித்து அனுபவித்து, இப்படிப்பட்ட ஒருத்தனை எந்த பெண்ணுக்குத்தான் பிடிக்காது என்று கூறிக் கொள்கிறாள்.

இப்போது மஞ்சள்

இப்போது மஞ்சள்

அருந்ததி ஆவியாக முதலில் சண்முகத்தின் உடம்பில் புகுந்தபோது, அவன் கண்களில் அருந்ததியின் கோபம் கொப்பளிக்கும் போது சிவப்பு நிறத்தில் கண்களில் பல்ப் எரியும்.இப்போது அருந்ததி தெய்வானை உடம்புக்குள் புகுந்து இருக்கா.ஆனால், கண்களில் மஞ்சள் பல்ப் எரியுதுங்க. ஒரு வேளை இது ரொமான்ஸ் பல்பாக இருக்குமோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+