பறந்து வரும் ஹார்ட்டின்கள்.. ஆனால் அஸ்வின் ரொம்ப ஃபீலாயிட்டாரே...!
சென்னை: ஹாட்டின் பறக்க விட்டபடி தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய அஸ்வினுக்கு வாழ்த்துக்களை கொட்டி வரும் அவருடைய ரசிகர்கள் வருட பிறப்பு அதுவுமாக இந்த மாதிரி பீல் பண்ணாதீங்க என ஆறுதலையும் கூறிவருகின்றனர்.
இன்று தான் வருடப்பிறப்பின் சந்தோஷமான நாட்கள் துவங்கினாலும் எனது வாழ்க்கையில் ரொம்பவே கஷ்டமானதாக இருக்கிறது.
இது என் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும் என அஸ்வின் வெளியிட்ட போஸ்ட் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .

கோமாளி குக்கிங்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசி எபிசோட் ஒளிபரப்பப் படுவதால் அதனை வருத்தத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நீங்கள் அனைவரும் எனக்கு காட்டிய அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி என கையெடுத்து கும்பிட்ட படி ரசிகர்களுக்கு நன்றி கூறிய அஸ்வினுக்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்களையும் மீண்டும் இதை விடவும் சிறப்பாக உங்களுக்கு எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசிகளையும் அவருடைய ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.

இளைஞிகளின் செல்லம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரொம்பவே பாப்புலர் ஆன அஸ்வின் தற்போது சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது. இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த நிகழ்ச்சி தான் இதற்கு முன்பு இவர் ஷாட்பிலிம்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் .

செம அங்கீகாரம்
ஆனால் அங்கு எதுவுமே கிடைக்காத அங்கீகாரம் இந்த நிகழ்ச்சி மூலமாக இவருக்கு கிடைத்திருக்கிறது .அதனை அவரே பலமுறை தெரியப்படுத்தி இருக்கிறார் .ஆனாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே ஒரு குடும்பம் போல தான் வாழ்ந்து வந்திருக்கின்றனர் .அதனால்தான் அவர்களால் இந்த நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர் .

பொண்ணுங்க ரசிகர்கள்
இதனை அனைவருமே கூறிவரும் நிலையில் தற்போது அஸ்வினும் கூறியிருக்கிறார் .இப்போது இருக்கிற சூழ்நிலையில் அஸ்வினுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது .அதுவும் கல்லூரிப் பெண்கள் மத்தியில் கிரஷாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றது .அதனால் தான் இவர் வெளி நிகழ்ச்சிக்கு செல்லும்போது பெண்கள் கூட்டம் இனிப்பினை மொய்க்கும் ௭றும்பு போல சுற்றி வருகிறது.

ஓடி வருவேன்
இந்த மாதிரி ஒரு வாழ்க்கையை கொடுத்த இந்த நிகழ்ச்சியை நான் எப்போதுமே மறக்க மாட்டேன் நான் இன்னும் எந்த நிலையில் மேலே சென்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டதும் ஓடி வந்து விடுவேன் என இவர் கூறியிருக்கிறார். இன்று தமிழ் புத்தாண்டுக்கு நடிகை நடிகைகள் அனைவரும் பாரம்பரிய உடையில் கலக்கலாக போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இவரை கோட்டு சூட்டில் பார்த்ததும் சொக்கிப் போகிற அழகில விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார் .

சூப்பர் பீலிங்
போட்டோஸ்கள் மட்டுமல்லாமல் தன்னுடைய பீலிங்கயும் ரசிகர்களிடம் ஷேர் பண்ணி இருக்கும் இவருடைய போஸ்ட் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது .இவர் போஸ்ட் போட்டதுமே கமெண்டில் இவருடைய ரசிகர்கள் சிவானியைத்தான் தேடிவருகின்றனர் .ஆனாலும் ஷிவாங்கி செல்லமாக அஸ்வினே என்று கூப்பிடுவது போலத்தான்அனைவரும் இவரை கூப்பிட்டு வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications