Webseries: மன நோயாளி... கொலையாளி... 2 தடவியல் நிபுணர்கள்... படபடப்பா வருதே...!
சென்னை: Voot ஆப்பில் கண்டு மகிழ அசுர் வெப்சீரீஸ் இந்தி மொழியில் வெளியாகி உலகத்தின் வெப்சீரீஸ் ஆர்வலர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளது. அசுர் வெப்சீரீஸ் வெல்கம் யுவர் டார்க் சைட் என்று சொல்லி ஆரம்பத்தில் வரவேற்கிறது.
கில்லர் என்று ஆங்கில எழுத்துக்கள், அதன் அர்த்தத்தை உணர்த்தும் இந்தி எழுத்துக்கள் என்று டிரெயிலரில் மிரட்டல். சுவர் முழுக்க எழுத்துக்கள் ஆர்வத்தை தூண்டுவிக்கும் படியாக இருக்கிறது.
மன நோயாளி ஒருவரை பற்றிய கதை என்றாலே அதில் திரில்லர், திகில் என்று கட்டாயம் இருக்கும். இதில் மன நோயாளி, கொலையாளி அதோடு தடவியல் நிபுணர்கள் என்று பரபரக்க வைக்கும் அம்சங்களுக்கான அனைத்தின் குவியலும் இருக்கும் கதை.

கலர்ஸ் டிவி Voot
கலர்ஸ் டிவி இந்தியாவின் பல மொழிகளிலும் சானல்கள் ஆரம்பித்து, வெற்றி நடை போட்டு வருகிறது. கலர்ஸ் டிவியின் Voot ஆப் இந்த அசுர் வெப்சீரீஸை தயாரித்து வெளியிட்டு உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் வெளியான இந்த வெப்சீரீஸ் பலராலும் விரும்பிப் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. திகில் திகில்னு தேடி எங்கே கிடைக்கும்னு பார்க்கறவங்களுக்கு இது ஒரு நல்ல விருந்து.

மிரட்டும் டிரெயிலர்
நமது பயத்தை டிரெயிலரிலேயே நாம் தெரிந்து கொள்ளும் அளவுக்கு மிரட்டுகிறது டிரெயிலர். இரவில் ஊளையிடும் நாய்கள்.. சுவர் முழுக்க கன்னா பின்னா எழுத்துக்கள். கல்லறை...நதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு பெரிய பாறையின் விளிம்பில் நிற்கும் மனிதன்..கை நிறைய ரத்தம்... ரத்தம்னாலே உதறும்...போதாததற்கு பயத்தில் உறைஞ்சும் போயிருவோம்..இங்கேயும் ரத்தமா?

ரத்தம் பூசிய பாதம்
ஒரு கை ரத்தத்தை எடுத்து இன்னொரு ஆளின் முன் பாதங்கள் இரண்டில் அந்த ரத்தத்தைத் தடவுவது... சுவற்றில் பேய் பூதம் மாதிரியான லைன் டிராயிங்ஸ்...எரியும் நெருப்புக்கு இடையில் மனித உருவம்...ஸ்ஸ் அப்பா விவரிக்கும்போதே படபடன்னு வருது. பார்க்கும்போது தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா... கால் நம்ம இஷ்டத்துக்கு நம்ம கூட வருமா வராதுன்னு டவுட்டா இருக்கே.

மனிதனை அழைக்கிறது
மேற்கண்ட பயம் தரும் அத்தனை விஷயங்களுக்கும் இடையில் மாட்டிக்கொண்ட மனிதன் ஒருவனைத்தான் வெல்கம் யுவர் டார்க் சைட் னு சொல்லி அசுர் அழைக்கிறது. என்னதான் சொல்கிறது என்று Voot ஆப் சென்று அசுர் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications