Eeramana Rojaave Serial: அவ்ளோதான் மொத ராத்திரி முடிஞ்சு போச்சு.. கடையை சாத்துங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் இப்படியும் பக்குவமா பக்காவா முதலிரவு நடக்குமான்னு இளசுகள் ஆச்சரியப்படும் அளவுக்கு காட்சி ஷூட் பண்ணி சீரியல் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து இருக்காங்க. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரான்ற மாதிரி இருந்து இருக்கும்.

மேலோட்டமா பார்க்கறப்போ இதுக்கெல்லாம் இப்படியான்னு இருந்துச்சு. ஆனா, வாழ்க்கையை ஒரு ஜோடி துவங்குவது என்பது எத்தனைபுனிதமானதுன்னு இன்றைய இளம் தலைமுறையினர் தெரிஞ்சுக்கற மாதிரி மலர் வெற்றி இருவரின் வாழ்க்கைத் துவங்குவதை காண்பிச்சு இருக்காங்க.

கல்யாணம் ஆகியும் மலரும் வெற்றியும் ஒண்ணு சேராம இருந்தாங்க. இவங்க எப்போ காதலை சொல்லிக்குவாங்க.. எப்போ சேர்ந்து வாழ ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்த்து அன்றாடம் சீரியல் பார்த்து வந்தவங்களுக்கு நல்ல மெசேஜ்தான்.

என் பெண்மையை

என் பெண்மையை

முதலிரவுக்கு ஆற அமர.. நிறைய நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டு, பெற்றோரை வச்சு அய்யரிடம் சொல்லி நாள் பார்த்து நல்ல ஆரம்பமா செய்து இருக்கா மலர். முதலிரவில் வழக்கமா பால் சொம்பு, அலங்காரம் என்று இருந்தாலும் டயலாக் புதுசுதான். இத்தனை நாள் கட்டிக்காத்து வந்த என் பெண்மையை உங்ககிட்டே ஒப்படைக்கிறேன் மாமா என்னை ஏத்துக்குவீங்களான்னு கேட்கிறாள் மலர்.

நமஸ்காரம் செய்ய

நமஸ்காரம் செய்ய

மலர் வெற்றியின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்ய, அவளை தூக்கிவிட்ட வெற்றி, அவள் பேசியது போலவே இத்தனை நாள் நான் கட்டிக்காத்த எனது ஆண்மையை... கற்பை உன்கிட்டே ஒப்படைக்கிறேன்.. நீ ஏத்துக்குவியா மலர்னு கேட்கிறான். அது என் பாக்கியம் மாமா என்று மலர் கூற வழக்கம் போல ஒரு சினிமா பாடலுடன் அவங்க முதலிரவு ஆரம்பமாயிருச்சு.

இது சிமாஸ்டிக்கா

இது சிமாஸ்டிக்கா

இது சினிமாஸ்டிக்கா தெரிந்தாலும், நிஜம் இருக்கு.. இந்த தாம்பத்ய உறவை சும்மா ஏனோதானோன்னு வாழ்ந்துவிட்டு போவது என்பது வாழ்க்கை அல்ல. இது ஒழுக்கம் சார்ந்தும் சிந்திக்க தூண்டி இருக்கிறது. கல்யாணத்துக்கு முன்பே ஆண் பெண் காதலர்களாக இணைந்து விடுவது என்பது குற்றம் என்று கூச வைத்து இருக்கிறது.

நல்ல கருத்து

நல்ல கருத்து

இதுவரை மொக்கையா சீரியலை இழுத்துக்கொண்டு இருந்தாலும், யதார்த்தமாக எதிர்பாராமல் நடந்த கல்யாணத்தில் ஒருவர் மீது ஒருவர் காதல், பிறகு காத்திருப்பு. கடைசியாக இருமனம் இணையும்படியான தாம்பத்யம் என்று நல்ல பயணம்.. சமூகத்துக்கு நல்ல மெசேஜ்...கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் எத்தனை விதத்தில் எப்படி எல்லாம் அனுசரிச்சு பயணிக்க வேண்டி இருக்கிறது என்பதை இத்தனை நாள் சீரியல் பயணத்தில் இப்போது சொல்லி இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+