Pandian Stores Serial: அப்பாடா...நாள் முடியறதுக்குள்ள வாழ்த்து சொல்லியாச்சு!
சென்னை: நிஜமா, மாயையா என்று புரியாமல் இது முல்லை இல்லை என்று அலட்சியமாக இருந்த கதிர், ஒரு வழியா ரியலைஸ் பண்ணிட்டான். கோபத்தில் முல்லை திரும்பிப் படுத்து இருந்தாலும், .இந்தா இங்கே பாருன்னு சொல்லி, கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டான்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல தவியாய் தவித்து வாழ்த்து சொன்ன காட்சிதான் மேற்கண்டது. முல்லை மகிழ்ச்சியில் கதிரை பார்க்கிறாள்.
கதிர் மணியைப் பார்க்கிறான்.. அப்பாடா... நாள் முடியறதுக்குள்ள பிறந்த நாள் வாழ்த்து சொல்லியாச்சு என்று சொல்கிறான். அடடா...நமக்கு வாழ்த்து சொல்லணும்னு நினைச்சுக்கிட்டுத்தான் இருந்து இருக்கான் போல என்று சந்தோஷப்படுகிறாள்.

4 மணியிலிருந்து 6 மணி வரை
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தினமும் திங்கள் முதல் சனி வரை என்று 4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை நான்கு நான்கு எபிசோடுகளாக ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு வாரம் முழுக்க ஒரு விஷயத்தை வைத்து ஓட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு. இப்போது அடுத்தடுத்து எபிசோடுகள் என்று ஒரு மாதத்து கதையை ஒரே வாரத்தில் பல எபிசோடுகளாக ஒளிபரப்பி வருகிறது.

முல்லைக்கு பிறந்தநாளாம்
முல்லைக்கு பிறந்த நாள் என்று கேள்விப்பட்ட கதிர், அவளுக்கு வாழ்த்து சொல்லி பரிசும் தர வேண்டும் என்று பரிசு பெட்டியோடு, அவள் வீட்டுக்கு போகிறான். ஆனால் முல்லை கதிர் வீட்டுக்கு வந்துவிடுகிறாள். இது தெரியாத கதிர், அவசரப்பட்டு முல்லைக்கு தன்னை பிடிக்கவில்லை. அதனாலதான் அவள் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்று வெறுத்து போகிறான்.

ஜீன்ஸ் போட்ட பசங்க
கடைக்கு வந்து கோவத்தில் பரிசு பெட்டியை விட்டெறிந்துவிட்டு, கல்லாவில் உட்கார்ந்து இருக்கும் தம்பி கண்ணனிடம், கடையில் வந்து உட்காராதடா.. பொண்ணுங்களுக்கு உன்னை பிடிக்காது. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு, கலர் கலரா டி ஷார்ட் போட்டுக்கிட்டு இருக்கும் பசங்களைத்தான் பிடிக்கும் என்று கத்துகிறான். இந்த அண்ணனுக்கு என்னாச்சு என்று குழம்பி தவிக்கிறான் கண்ணன்.

எப்படியோ சொல்லியாச்சு
அங்கு இங்கு சுத்திட்டு வந்தாலும், முல்லையின் பிம்பம் அவனுக்கு அங்கங்கு தெரிகிறது. நிஜம் என்று நினைத்து ஏமாந்து விரக்தியாக இருக்கிறான். அப்போதுதான் வீட்டுக்கு வரும் அவன், கட்டிலில் உட்கார்ந்து இருக்கும் முல்லையும் வெறும் மாயைதான் என்று கண்டுக் கொள்ளாமல் இருக்கிறான். கோவத்தின் உச்சிக்கே போன முல்லை, தலையணையை தூக்கிப்போட்டுவிட்டு, அழுதுக்கொண்டே படுத்து விடுகிறாள்.

அடடா நிஜமா
அடடா நிஜமாவே வந்துட்டாளான்னு எழுந்து அவளை இங்கே பாரு.. இந்தா என்றெல்லாம் கூப்பிடுகிறான். கடைசியாக பெட்டில் தட்ட அவள் எழுந்து உட்கார்ந்து விடுகிறாள். மெதுவாக கையை இவன் நீட்ட, அவளும் கையை நீட்ட...அதை இறுகப் பற்றிக்கொண்டு, குலுக்கி பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று சொல்கிறான். மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்ற முல்லை ஆசையாய் அவன் முகத்தைப் பார்க்க. இவன் கடிகாரத்தைப் பார்த்து...அப்பாடா...நாள் முடியறதுக்குள்ள சொல்லிட்டேன் என்று சொல்கிறான் கதிர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications