Azhagu Serial: அழகுக்கு அழகு சேர்க்க வந்த ரேவதி!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலுக்கு அழகு சேர்ப்பது போல கடந்த சில வாரங்களாக இடைவெளி இல்லாமல் நடிகை ரேவதி அழகம்மையாக சீரியலில் தலை காண்பித்து வருவது சீரியல் ஆர்வலர்களை திருப்தி படுத்தி வருகிறது.
அழகு சீரியலின் ஸ்டார் காஸ்ட் நடிகை ரேவதி. இவருக்காக இந்த சீரியலை பார்த்த ஆண்களும், பெண்களும் ஏராளம். இவருக்கு இளம் வயதில் ஆரம்பித்த ரசிகர்கள் இன்று வரை இவரது ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ அழகு சீரியலுக்கு இவரை நடிக்க வைத்துவிட்ட தயாரிப்பாளர்கள், நடுவில் இவரது கால்ஷீட் கிடைக்காமல் திண்டாடித்தான் போய்விட்டார்கள்.

தனி அழகு
வயதானாலும் தனி அழகில் மிளிரும் நடிகை ரேவதி, நடிப்பிலும் தனி பாணியில் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர். ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் வசீகர குரலால் மனம் கவரும்படி பேசி அனைவரையும் கவர்ந்து விடுவார். அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் இவர் சிறிது காலம் சீரியலில் தலை காட்டவில்லை.

ஆவணப்படம் விளம்பரம்
ரேவதி எப்போதும் சும்மா இருக்க மாட்டார். விளம்பரம் குறும்படம், ஆவணப்படம் என்று பிசியாக இருப்பார். அது போல, அழகு சீரியலில் நடிக்கும்போதும் பிரேக் எடுத்துக் கொண்டு விளம்பர படம், குறும்படம் என்று நடிக்கப் போய்விட்டு வந்தாரோ என்னவோ, இவரை காணாமல் ரசிகர்கள் தவித்துதான் போய்விட்டனர்.

ரேவதியின் குழந்தை
ரேவதியின் பெண் குழந்தை யாத்ரா என்கிற பெயரில் வளர்ந்து வருகிறது. அது தனது பெற்றோர் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறி இருக்கிறார் ரேவதி. ஒருவேளை இந்த பெண் குழந்தையுடன் நாட்களை செலவிட சென்று இப்போது மீண்டும் அழகு சீரியல் ஷூட்டிங் திரும்பி இருக்கிறாரோ என்னவோ என்றும் பேச்சு அடிபடுகிறது.

மஞ்சள் காட்டு மைனா
இந்த சீரியலில் நடிக்கும் மஞ்சள் காட்டு மைனா காயத்ரி ஜெயராமும் அழகு சீரியலுக்கு மெருகூட்டி இருக்கிறார். ரேவதி, காயத்ரி ஜெயராம் இருவரும் இந்த சீரியலின் ஸ்டார் காஸ்ட் என்று சொல்லலாம். இவர்கள் இருவரும் இல்லை என்றால் இந்த 6:30 மணி நேர ஸ்லாட் சீரியல் இவ்வளவு சூடு பிடிக்காது என்பதுதான் உண்மை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications