Athisaya Piraviyum Arputha Pennum Serial: ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே விஜய் டிவி வார்னிங்!
சென்னை: விஜய் டிவியின் வரும் ஞாயிறு முதல் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் என்று ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இது மாயா மந்திரம்ஜாலங்கள் நிறைந்தது போன்ற விஷயங்களை அடிப்டையாகக் கொண்ட கதை.
இந்த சீரியலுக்கான ப்ரோமோவிலேயே விஜய் டிவி எச்சரிக்கையாக இது வெறும் கற்பனைக் கதைதான் என்பதற்கான பொறுப்பு துறப்பு வாசகங்களையும் ஒளிபரப்பி வருகிறது. அலாவுதீன் அற்புத விளக்கு போன்ற மாயஜாலம் நிறைந்த கதையாக இந்த சீரியல் இருக்கும் போல இருக்கிறது.
எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி செய்யணும் என்பது போல சில நம்ப முடியாத விஷயங்கள் சீரியலில் வரும்போது விஜய் டிவி அந்த இடத்தில் இது வெறும் கற்பனைதான் என்பது போன்ற வாசங்கங்களையும் தவறாமல் இடம்பெறச் செய்துவிடும்.

அற்புத பெண்ணும்
விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் சீரியல் இந்தி டப்பிங் சீரியல் போலும். சன் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு அலாவுதீனும் அற்புத விளக்கும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவும் டப்பிங் சீரியல்தான். இதில் மாய ஜால தந்திரங்கள் நிறைய இருப்பதால், குழந்தைகள் விரும்பிப் பார்த்து வருகின்றனர்.இதே போன்ற ராகத்தில் அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் சீரியல் உள்ளது.

குழந்தைகளைக் கவரும் விதத்தில்
விடுமுறை தினமான ஞாயிற்று கிழமை அன்று குழந்தைகளைக் கவரும் விதத்தில், விஜய் டிவியும் மாயாஜால தந்திரங்கள் நிறைந்த அலாவுதீனும் அற்புத விளக்கும் மாதிரியே அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் என்கிற சீரியலை ஞாயிறு காலை 9 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இதன் ப்ரோமோ வெளியாகியும் வருகிறது.

ப்ரோமோவில் எச்சரிக்கை
அதிசய பிறவியும் அற்புத பெண்ணும் ப்ரோமோ வெளியாகி வரும்போதே அதில், இந்த நிகழ்ச்சி பொழுது போக்கு நோக்கத்தை மட்டுமே கொண்ட ஒரு கற்பனை கதையாகும். நாங்கள் இயற்கைக்கு புறம்பான மற்றும் மூட நம்பிக்கையுள்ள அல்லது மாய மந்திர பழக்க வழக்கத்தை ஆதரிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை என்று ஸ்லைட் போட்டுவிடுகிறார்கள்.

தாழம்பூ அரண்மனை கிளி
இதே போன்றுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியலுக்கு அடிக்கடி ஸ்க்ரோல் விட்டுக்கொண்டு இருந்தார்கள். கடைசியில் அந்த சீரியல் பாதியில் நின்றுவிட்டது. இப்போது அரண்மனை கிளி சீரியலில் இது போல நம்ப முடியாத காட்சிகள் வரும்போது இடத்தில் ஸ்க்ரோலிங்கில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது விஜய் டிவி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications