ஆச்சரியங்களின் பெரும் தொகுப்பு லப்பர் பந்து! எப்படி நடந்தது இந்த மேஜிக்?
சென்னை: அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளை அரங்கம் நிறைந்த காட்சிகளாக மாற்றியுள்ள திரைப்படம்தான் லப்பர் பந்து. வசன கர்த்தாவாக இருந்து இயக்குநராக காலடி வைத்த முதல் படத்திலேயே உலக கோப்பையை வென்றுவிட்டார் இயக்குநர். படத்தில் அத்தனை யதார்த்தம் மற்றும் ஒவ்வொருவரும் தங்களை கனெக்ட் செய்துகொள்ள விஷயங்கள் இருந்தன.
இது குறித்து சாதிக் ஐஷ்வர்யன் என்பவர் சமூக வலைத்தளத்தில் சிலாகித்துள்ளதை நீங்களும் பார்க்கலாமே.. நிஜமாகவே ஆச்சர்யங்களின் பெரும் தொகுப்பே லப்பர் பந்து. முதல் ஆச்சர்யம், ஓர் இளம்ஹீரோ அட்டகத்தி தினேஷ் எப்படி வயசு பத்தி அலட்டிக்காமல் இந்த படத்தை ஒப்புக்கொண்டார் என்பதே! அவரது ஈகோ இல்லா கலை ஆர்வம் நமக்கு செம தீனியாக அமைந்துவிட்டது.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பற்றி ஆச்சர்யப்பட வழியில்லாதபடி மலையாளப்படங்கள் போல இது தரமான தமிழ்படங்களின் பொற்காலமாக இருக்கிறதே! ஆனாலும் பிரமிப்பூட்டும் விஷயம் என்னவென்றால் ஒரே ஒரு பந்துக்குள் சாரி ... படத்துக்குள் எத்தனை எத்தனை மேன்மையான மேட்டர்களை மனிதர் அனாயாசமாக நுழைத்திருக்கிறார் என்பதே! அதுவும் அடிநாதமான கிரிக்கெட் கதையை குதறாமலும்.. நேர்த்தி கெடாமலும்!
-கிராமத்து கிரிக்கெட் போட்டி என தேன் பூசினாலும் உள்ளிருப்பது சாதி மறுப்பு சமூகநீதி மருந்தல்லவா!
-மகன் வேற்றுசாதி பெண்ணை அழைத்துவந்து நெருக்கடி தந்தும் மகனை விட்டுக்கொடுக்காத தாய்மை!
-அன்புக்கும் அக்கறைக்கும் முன்னால் ஜாதி ஒரு விஷயமே இல்லை என மருமகளை கொண்டாடும் மாமியாரின் தெளிவு!
-ஆணின் பொறுப்பற்ற தன்மையை பொரிந்து தள்ளினாலும் ஒற்றை மனுஷியாக குடும்பம் காக்கும் குடும்பத்தலைவி ஆவேசம்
-வருடங்கள் பத்து இருபது கடந்தும் உள்ளுக்குள் பொங்கும் கணவனின் தீராக்காதல்
-தந்தையின் குறையான பொறுப்பின்மையையும் மீறி தன்மீதான அவரது பாசத்தில் மகள் வைக்கும் நம்பிக்கை
-சாதி பாகுபாட்டில் விருப்பம் இல்லை என்றாலும் அதை உரக்க சொல்லாமல் தவித்த மேல்சாதி.. சீக்கிரமே தன் தவறை உணரும் பண்பு
-பத்து ஆண்கள் நடுவே ஒற்றை சிறுமியாக வித்தை காட்ட இளம்பெண்ணுக்கு தரும் வாய்ப்பு
-வாழ்வோடு நிறைய விளையாடிய அப்பா காரணமான அம்மாவின் அவஸ்தைகள் தனக்கும் நேரலாம் என தெரிந்தும் 'உன் வாழ்வை உன் விருப்பப்படியே நீ வாழு' என அனுப்பும் இந்த தலைமுறை காதலியின் புரிதல்
-எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கான வெற்றியை விட சமூகத்திற்கான வெற்றியே முக்கியம் எனும் ஹீரோவின் சமநீதி பற்று!

வாவ்.. வாவ் இப்படி கதாபாத்திரங்கள், காட்சிகள், வசனங்கள் வழியே இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து அடித்த சிக்சர்களுக்கு கணக்கே இல்லை. காமிரா,இசை, கலை, படத்தொகுப்பு எல்லாமே தரம்!
தினேஷ், ஹரிஸ்,காளி, பாலசரவணன், கீதா கைலாசம், காதலியாக நடித்தவர் என எல்லாருமே சூப்பராக நடித்தாலும் என் கவனத்தை பெரிதும் ஈர்த்தவர்கள் தினேஷின் மனைவி சுவாசிகா & நண்பன் ஜென்சன் திவாகர்! மொத்தத்தில் நம் குடும்பத்தின் நண்டு சிண்டுகள் முதல் பெருசுகள் வரை ரசிக்கத்தக்க பல அம்சங்களை உள்ளடக்கிய காரணத்தால் இந்த லப்பர் பந்து குடும்பமா போய் காணவேண்டிய திருவிழா கொண்டாட்டம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். நீங்கள் படம் பார்த்தாச்சா, உங்கள் கருத்து என்ன.. கமெண்ட்டில் சொல்லலாமே..
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications