அத்தை... சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்களே...!
சென்னை: தனது மாமியாரை போலியாக சுய நலத்துக்கு ஒரு மருமகள் இப்படி பாராட்டி இருக்கார். அதாவது.. அத்தை இந்த கொண்டையில் சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரியே இருக்கீங்க என்று.
இதில் என்ன போலி, என்ன சுயநலம் என்று பிறகு பார்க்கலாம். ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியின் வரும் வார விவாத தலைப்பு போலியான நடிப்பினால் அடைந்த பலன் என்ன என்பதுதான்.
இதில் எல்லா உறவுகளும் அடக்கம். மாமியார், மருமகள் உறவு மட்டும் அல்ல அம்மா பிள்ளை, அப்பா மகள் பாசம் முதற்கொண்டு அடங்கி இருக்கிறது.

எங்க துபாய்ங்க
சில பேர் வெளிநாடு.. அதுவும் இதோ இங்கே இருக்கற துபாய்க்கு வேலைக்கு போயிட்டு லீவில் ஊருக்கு வரும்போது பண்ற அலட்டல் இருக்குமே... வெற்றிக்கு கொடி கட்டு படத்தில் வடிவேலு பண்ற அலப்பறை மாதிரி இருக்கும். காது கொண்டு கேட்க முடியாது.

அண்ணன் பேசுவது
ஜீ தமிழ் டிவியின் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒருவர் தனது அண்ணன் பத்தி சொல்றார். அண்ணன் துபாயில் வேலை பார்க்கிறார் சார்... கார்பெண்டர் வேலை. லீவுக்கு ஊருக்கு வரும்போது துபாயில் தான் ரொம்ப ஜாலியா வேலை பார்க்கறதா சொல்வார். நான் துபாய் போயி மூணு மாசம் அவரோட இருந்தேன்.

சார் கஷ்டம்
அண்ணனோட வேலை ஒரு ரோபோட் மாதிரிதான் சார். காலை 7 மணிக்கு கிளம்பி போனா ராத்திரி ஏழு மணிக்கு வருவார். கார்பெண்டர் வேலை ரொம்ப உயரத்தில் ஏறி எல்லாம் வேலை பார்க்கணும். ஆனால், வீட்டுக்கு வந்து தனது மகள்கிட்ட பேசும் போது தான் துபாயில் ரொம்ப சொகுசா வேலை பார்க்கறதா சொல்வார்.அதனால், அவங்க சந்தோஷமா இருப்பாங்கன்னு சொன்னார்.

என் நண்பன்
அதே மாதிரி என் நண்பன் ஒருத்தன் சென்னையில் வேலை பார்க்கறான்.ரொம்ப ஒல்லியா இருப்பான். சாப்பிட்டு கூட இருக்க மாட்டான். அம்மாவுக்கு போன் பண்ணினா சொல்லுவான்.. அம்மா நான் இங்கே வயிறு நிறைய சாப்பிட்டுட்டு சந்தோஷமா வேலை பார்த்துகிட்டு இருக்கேன். நீங்க கவலைப்படாம சந்தோஷமா இருங்க. லீவு கிடைக்கும்போது ஊருக்கு வரேன்னு பொய் சொல்லுவான். போலியாத்தான் இருக்கேன்.. அம்மா சந்தோஷமா இருக்காங்க அது போதும்னு சொல்லுவானு சொன்னார்.

ரொம்ப அழகு
சார் எனக்கு சமைக்கறதுன்னா பிடிக்காது சார்... அதனால், வீட்டுக்குள்ளே நுழையும்போதே அத்தை நீங்க எனக்கு அத்தை இல்லை அம்மான்னு சொல்லிட்டேன். அதே மாதிரி அத்தை இந்த புடவையில் நீங்க கொள்ளை அழகுன்னு சொல்லுவேன். அதோட இந்த கொண்டை போட்டு இருப்பதில் சைடுல பார்த்தா சரோஜா தேவி மாதிரி அழகா இருக்கீங்கன்னு சொல்லுவேன். ஆனா, மனசுக்குள்ளே எப்படி இவங்க சாவாங்கன்னு இருக்கும்னு வடிவேலு மாதிரி மைண்ட் வாய்ஸ் ஓடிக்கிட்டுத்தான் இருக்கும்னு தைரியமா சொல்றார்.
பொறுத்திருந்து பார்க்கலாம்... இன்னும் யார் யார் மனசில் மாமியார் பத்தி என்ன ஓடுதுன்னு...!
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications