கோவா சொகுசு ரிசார்ட்டில் அவந்திகா கல்யாணம்! த்ரிஷா மட்டுமா அல்லது விஜய்யுமா? ஒரே மாதிரியான உடை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்பு மகள் அவந்திகாவின் திருமணம்தான் பலரது கவனத்தையும், வியப்பையும் பெற்று வருகிறது.. நெருங்கிய சொந்தங்கள் மற்றும் திரை உலக முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற இந்த விழாவில், விஜய் பங்கேற்பாரா? திரிஷா சென்றுள்ளாரா? இது தொடர்பான போட்டோக்களை திரிஷா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்த்த நடிகை குஷ்பு - இயக்குனர் சுந்தர் சி தம்பதியரின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணம், கோவாவில் உள்ள சொகுசு ரிசார்ட்டில் இன்று மிக பிரமாண்டமாகவும் நடந்து முடிந்துள்ளது. மணமகன் ஷ்ரவன் சீனிவாசனுக்கும் அவந்திகாவிற்கும் பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு, நெருங்கிய சொந்தங்கள் முன்னிலையில் தாலி கட்டும் வைபவம் நடந்துள்ளது.

Avanthika

குஷ்பு மகள் திருமணம்

இந்தத் திருமண விழாவில் குஷ்புவின் மிக நெருங்கிய தோழிகளான ராதிகா சரத்குமார், சுகாசினி, பூர்ணிமா பாக்யராஜ், சரிதா மற்றும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

மேலும், டைரக்டர் இயக்குனர் கே.பாக்யராஜ் தனது முழு குடும்பத்துடனும், நடிகர் ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவியும், தெலுங்கு முன்னணி நடிகர்களான நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோரும் கோவாவிற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

சென்னையில் பிரமாண்ட வரவேற்பு

நடிகை த்ரிஷாவும் இன்று திருமணத்தில் பங்கேற்க கோவா சென்றுள்ளதாக காலையிலிருந்தே மீடியாக்களில் வட்டமடித்து வருகிறது.. இதனால், த்ரிஷா மட்டும்தான் கோவா சென்றுள்ளாரா அல்லது அக்கா குஷ்புவின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விஜய்யும் அவருடன் இணைந்து சென்றுள்ளாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

திரிஷா - விஜய்

சமீபகாலமாகவே முக்கிய திருமணங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாகவே வருகை தருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, இருவரும் ஒரே மாதிரியான கலரில், அல்லது ஒரே மாதிரியான டிசைனிலோ ட்வின்னிங் உடைகளை அணிந்து வருவது இவர்களின் அடையாளமாகவே மாறிவிட்டது. அதனால், இன்றைய கோவா திருமண நிகழ்விலும் அப்படியான ஒரே மாதிரியான உடையில் இருவரும் மாஸாக என்ட்ரி கொடுப்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில் விஜய்?

ஒருவேளை விஜய் இன்று கோவா செல்லாவிட்டால், விரைவில் அவந்திகாவுக்கு சென்னையில் நடைபெறும் திருமண வரவேற்பில் கட்டாயம் பங்கேற்கக்கூடும் என்கிறார்கள்.

ஏனென்றால், திருமண அழைப்பிதழ் வழங்கும் போதே முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்த குஷ்பு, "தம்பி கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்" என்று அன்போடு அழைப்பு விடுத்திருந்தார். எனவே சென்னை நிகழ்விலாவது விஜய் பங்கேற்கக்கூடுமாம்.

அதேபோல் த்ரிஷா எப்போதுமே தான் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை, சமூக வலைதளங்களில் உடனுக்குடன் போஸ்ட் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். அந்த வகையில், இன்றைய குஷ்பு மகள் திருமண நிகழ்வில் பங்கேற்ற புகைப்படங்களையும் ஷேர் செய்வாரா? என்று ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+