இனிமே குட் டச்.. பேட் டச் வேணாமே.. அழகிய தமிழில் சொல்லலாமே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் வாராவாரம் ஞாயிற்று கிழமைகளில் நம்ம ஊரு ஹீரோன்னு ஒரு அருமையான நிகழ்ச்சி. இதைத் தொகுத்து வழங்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

ரொம்ப யதார்த்தமா தொகுத்து வழங்கறார். எந்தெந்த ஊரில் யார் யார் நல்லது, சமூக சேவை செய்யறாங்களோ அவங்கதான் நம்ம ஊரு ஹீரோ. இவங்களுக்கு ஊக்கம் தரதுலயும் சரி, பாராட்டு சொல்றதுலயும் சரி.. விஜய் சேதுபதி பின்றார்.

Avoid good touch and bad touth, teach them in tamil

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எப்படி விழிப்புணர்வு தருவது என்பது குறித்து பேச அந்த ஊரு நாயகன் வந்திருந்தார்.

தனி ஒரு ஆளாக இல்லாமல் ஒரு குழுவாக இணைந்து செயல்படறாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக்கறாங்க. பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, ஆண் குழந்தைகளுக்கும் இது நடக்குதுன்னு இன்னும் பலருக்குத் தெரியாமத்தான் இருக்குன்னு அதிர்ச்சி தகவலையும் சொன்னாங்க. சென்னையிலதான் இது போல அதிக குற்றங்கள் நடக்குதாம்.

ஆண் பிள்ளைகளை நீ இடுப்புல கை வச்சா கூச்ச படக்கூடாது.நெளிய கூடாதுன்னு சொல்லியே வளர்த்துடறோம். அதனால அவன் தனக்கு ஏதாவது செக்ஸுவல்; ஹராஸ்மென்ட் நடந்தா வெளியில சொல்ல கூச்சப்படறான்.

அதனால், இதை பெத்தவங்க கிட்டேயிருந்து ஆரம்பிச்சு அவங்களுக்கு இப்படி பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுங்கன்னு சொல்லிக் குடுத்து வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்குன்னு சொன்னார் குழுவில் ஒருவர்.

குட்.. டச், பேட்... டச் பத்தி கேட்டபோது, அப்படி சொன்னா விளைவுகள் மோசமாகுது சார்.. ஒரு பொண்ணு என்னை எல்லாரும் குட் கேர்ள்னு சொல்லுவாங்க. ஆனா, இப்போ எனக்கு பேட் டச்சாயிருச்சு.. இனிமே எப்படி நான் குட் கேர்ள் ஆவேன்னு சொல்லிட்டே சூசைட் பண்ணிகிட்டாங்க.

அதுலேர்ந்து அதை நாம் சொல்ல கூடாதுன்னு முடிவெடுத்து பாதுகாப்பு அற்றது, பாதுகாப்பு உள்ளதுன்னு சொல்லி குடுக்க ஆர்மபிச்சு இருக்கோம்னும், அதை நாங்க 2010லேயே மாத்திகிட்டோம்னும் சொன்னங்க.

குழந்தைங்க கிட்ட சொல்லும்போது, வாயில தொட்டா பாதுகாப்பு இல்லை, செஸ்ட் அல்லது பிரஸ்ட், இரு கால்களுக்கு இடையேயான இடம் , பின்னால உட்காரும் இடம் இதிலெல்லாம் அறியாதவங்க, தெரியாதவங்க, இல்லை கெட்டவன்னு தோணறவங்க கை வச்சால் அது பாதுகாப்பு இல்லாததுன்னு சொல்லித் தாறோம்னு சொன்னதும்,

தமிழில் பேசும்போது சொல்லவும் நல்லாருக்கு, சுலபமாவும் புரியுது இல்லே.. சிறப்புன்னு விஜய சேதுபதி சொல்ல கைத்தட்டல் வெகு சிறப்பாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+