Ayudha Ezhuthu Serial: கல்லுக்குள்ளேயே ஈரம் இருக்கு...காளி அம்மா மனசில் இருக்காதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் நடிகை மவுனிகாவுக்கு மிக முக்கியமான வேடம். கிராமத்தில் பஞ்சாயத்து தலைவி மாதிரி அதிரடி கதாபாத்திரம்.காளி அம்மா என்பதுதான் இவங்க பேர்.

வித்தியாசமான கெட்டப்பில் அசத்தலா நடிக்கிறார். நடிப்பில் வித்தியாசம் காண்பிப்பது, கதா பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி நடிப்பது என்பதில் மவுனிகாவும் ஒரு நல்ல நடிகை என்கிற பெயர் பெற்றவர்.

ரொம்ப வருஷத்துக்கு பிறகு இவர் விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியல் மூலம் சின்னத் திரைக்கு வந்துள்ளார்.என்றாலும், நல்ல அழுத்தமான கதாபாத்திரத்தில் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கார்.

காளி அம்மாவின் கணவர்

காளி அம்மாவின் கணவர்

காளி அம்மாவின் கணவர், இவள் வீட்டுக்கு மட்டும் தலைவியாக இருந்தால் போதும் என்று நினைவில் இருக்க, காளி அம்மா நான்கு ஆண் பிள்ளைகளை பெத்து இருந்தாலும், ஊர் தலைவியாக வாழ்வது, தன் பேச்சை கேட்காதவர்களை அடிப்பது, கொலை செய்வது என்று ஒரு ரவுடி கும்பலையே வைத்துக் கொண்டு சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார்.

 பிடிக்காத புருஷன்

பிடிக்காத புருஷன்

காளி அம்மாவின் நடவடிக்கைகள் பிடிக்காத அவங்க புருஷன், கடைசி பையன் சக்தி குழந்தையாக இருந்தபோதே வெளியில் வந்துடறார். புருஷன் சொல்லியும் கூட கேட்காத அராத்து காளி அம்மா. இந்த சமயத்தில்தான் கடைசி பையன் சக்தியை வைத்து, கலெக்டர் இந்திராவை மடக்க திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறாங்க காளி அம்மா.

காளி அம்மா இந்திரா

காளி அம்மா இந்திரா

சப் கலெக்டர் இந்திரா கிட்டத்தட்ட சக்தியை காதலிக்கிறாள் என்கிற நிலையில்தான் கதை போகுது. இந்திராவுக்கு எதிரி காளி அம்மா என்றாலும், அவங்க பையன்தான் சக்தி என்று தெரியாமல் அவனுடன் நெருங்கி பழக்கறா. இப்படி இதில் எந்த மாதிரி ஆதாயம் கிடைக்கும் என்று செயல்படும் காளி அம்மா வீட்டில் மூணு லட்சம் ரூபாய் பணம் காணாமல் போயிருது.

போஸ் குடிகாரன்

போஸ் குடிகாரன்

காளி அம்மாவின் மூணாவது பையன் போஸ்தான் பணம் எடுத்து இருப்பான்னு அவனை அந்தம்மா கண்டபடி திட்ட, அப்போதுதான் வந்த சக்தி, பணத்தை நான்தான் எடுத்தேன்.போஸ் அண்ணன் பட்ட கடனைத்தான் குடுத்தேன்னு சொல்றான். காளி அம்மா சக்தியை மட்டும் திட்டவில்லை. ஆனால், போஸ் அம்மா தான்தான் திருடன்னு சொல்லிட்டாங்கன்னு சாப்பிடலை.கூப்பிட்டு சமாதானம் செய்ங்கம்மான்னு சக்தி சொல்ல,

இல்லை திருடன்

இல்லை திருடன்

என்ன மன்னிப்பு கேட்க சொல்றியா? அப்படீன்னு ஈகோவோட கேட்கறாங்க.அப்படி இல்லேம்மான்னு சொல்ல, போஸை கூப்பிட்டு, அவனுக்கு செலவுக்கு பணம் கொடுக்க, அதை வாங்கிக் கொண்ட போஸ், நான் குடிப்பேன், ஆட்டம் போடுகுவேன். ஆனா, திருடன் இல்லைம்மான்னு சொல்லி அம்மா மடியில் படுத்து அழ, அப்போதும் ஈகோவை விட்டுத் தராமல் கலங்கும் கண்களை மறைச்சுக்கறாங்க காளி அம்மா

என்னதான் கல்லா இருந்தாலும், அதுக்குள்ளும் ஈரமிருக்கும்தானே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+