Ayudha Ezhuthu Serial: வருங்கால மாமியார்னு தெரியாம இவரும்.... மருமகள்னு தெரியாம அவரும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு கல்யாணம் ஆகப்போகுதுன்னு அதுவும் தான் காதலிச்ச சக்தியுடன் கல்யாணம் நடக்கப் போகுதுன்னு சந்தோஷத்தில் மிதக்கிறாள் இந்திரா.

மாப்பிள்ளை யார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சக்தி நல்லவன் என்பதற்கு அவள் மனமே உத்திரவாதம். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக கோயிலுக்கு வர்றாங்க.

அங்கே பார்த்து காளி அம்மா அந்த நேரத்துக்கு கோயிலுக்கு வர்றதா? வந்துட்டாங்க. இனி காமெடியைப் பாருங்க...

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

விஜய் டிவியின் ஆயுத எழுத்து சீரியலில் சப் கலெக்டராக இந்திரா குக்கிராமத்திற்கு வர்றாங்க. அந்த ஊரில் காளி அம்மா ராஜ்ஜியம்தான். ஊர் மக்கள் அவங்க சொல்றதைத்தான் கேட்கணும். பள்ளிக்கூடம் அந்த ஊரில் நடக்க கூடாதுன்னு காளி அம்மா கண்டிஷன்.அதே போல பள்ளியை நடத்தாமல் ஆசிரியர் சம்பளம் மட்டுமே வாங்கறாங்க.

இந்திரா பள்ளியை

இந்திரா பள்ளியை

இதை மாத்தி சப் கலெக்டர் இந்திரா பள்ளியையும் திறந்து வச்சுடறாங்க. கூடவே இருக்கும் சக்தி தனக்கு எதிரியான காளி அம்மாவின் மகன்னு தெரியாமல் இவன் வீசிய காதல் வலையில் விழுந்துடறாங்க. அவனும் தான் காளி அம்மா மகன்னு சொல்லாமல் மறைத்து விடுகிறான்.

காளி அம்மாவுக்கு தெரியாமல்

காளி அம்மாவுக்கு தெரியாமல்

காளி அம்மாவுக்குத் தெரியாமல் சக்திக்கும், இந்திராவுக்கும் ரொம்ப சிம்பிளா நிச்சயதார்த்தம் முடிஞ்சுருது. காளி அம்மாவின் புருஷன் தலைமையில் இந்த நிச்சயதார்த்தம் நடக்குது. இந்திராவுக்கு ரொம்ப சந்தோசம்.

காளி அம்மா தரிசனம்

காளி அம்மா தரிசனம்

சந்தோஷத்தில் கோயிலுக்கு வந்து இருக்கா இந்திரா குடும்பத்துடன். இந்த பக்கம் சக்தி தன் அம்மா காளி அம்மாவுடன் கோயிலுக்கு வந்திருக்கான். காளி அம்மா உனக்கு கல்யாணமாமே..இந்த ஊரில் என் தலைமையில்தான் எல்லார் கல்யாணமும் நடக்கும்னு தெனாவட்டா சொல்றாங்க.

உங்க ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும்னு காலில் விழறா இந்திரா.உனக்கு வரப்போற மாப்பிள்ளையைப் பார்க்கணுமேன்னு காளி அம்மா கேட்க, அவர் உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவர்தான்னு இந்திரா சொல்றா. காளி அம்மாவுடன் இந்திராவின் உளவாளியாக இருப்பதாக கூறி அவங்க கூட நிற்கும் சக்திக்கு அல்லு இல்லை.

காளி அம்மா இங்க பார்றா அதாரு எனக்கு தெரிஞ்ச மாப்பிள்ளைன்னு அதிரடியா சிரிச்சுக்கிட்டு பிள்ளை சக்தியைப் பார்க்கறாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+