Ayudha Pooja Special: விஜய் நட்சத்திரங்களின் ரெடி டேக் ஆக்ஷன்!
சென்னை: தொலைக்காட்சிகள் ஆயுத பூஜைக்கு என்று சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்க தயாராகி வருகின்றன. அதன் ப்ரோமோக்கள் வெளியாகி இதற்கென காத்திருக்கும் மக்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றன.
சானல்கள் மெனக்கெடுகின்றன என்றாலும், ரொம்ப மெனக்கெடுவதில்லை.தங்கள் தொலைக்கட்சியின் சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை வைத்து சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி விடுகின்றன.
விஜய் டிவி தனது சீரியல் நட்சத்திரங்கள், தொகுப்பாளர்களை வைத்து ரெடி டேக் ஆக்ஷன் என்று சிறப்பு நிகழ்ச்சியை ஆயுத பூஜைக்கு சூட் செய்து இருக்கிறது. இப்போது அதன் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறது.

ஆக்ஷன் நிகழ்ச்சி
ரெடி டேக் ஆக்ஷன் ஸ்பெஷல் ரியாலிட்டி கேம் ஷோ மாதிரி இல்லாமல், விளையாட்டுடன் கூடிய வீர தீர சாகச நிகழ்ச்சி மாதிரி தெரிகிறது. மணிமேகலை, ரியோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இருக்கின்றனர். நிகழ்ச்சியை அவுட்டோரில் ஷூட் செய்து இருக்கிறார்கள்.

வரும் திங்கள்
வரும் திங்கள் ஆயுத பூஜை விழா நாள்.இந்த தினத்தில் காலை 9 மணிக்கு ரெடி டேக் ஆக்ஷன் என்கிற இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆண்களும், பெண்களும் விஜய் டிவியின் நட்சத்திரங்கள் என்பதால், பரிச்சய முகங்களுடன் இந்த ஷோ நடக்கிறது.

புதுசு இல்லை
இப்போது சானல்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒளிபரப்பும் ரியாலிட்டி ஷோக்கள் எதுவும் புதிது இல்லை. திரை நட்சத்திரங்களின் நேர்காணல், வெளியான திரைப்படங்கள் தொடர்பான பார்வை என்று எதுவும் இல்லை.இதெல்லாம் தயார் செய்ய யாரும் பெரிதாக மெனக்கெடுவது இல்லை.

பெரிய திரையை
தொலைக்காட்சி சானல்கள் ஒரு காலத்தில் வெள்ளித் திரையை மட்டுமே நம்பி இருந்தன. நட்சத்திரங்களின் நேர்காணல், இயக்குனர்களின் நேர்காணல் என்று அமர்க்களப்படும். இப்போது இவர்களை சார்ந்து எந்த தொலைக்காட்சி சானல்களும் இல்லை. தங்களது தொலைக்கட்சித் தொடர்களில் நடிக்கும் நட்சத்திரங்களை வைத்தே சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விழா நாட்களை கடத்தி வருவதை வழக்கமாக கொண்டு உள்ளன.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications