Ayutha pooja speciel: விஜய் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷல்.. கொலைகாரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்டிகை கோலாகலம் ஒரு புறம் இருக்க ,டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளிலும் பண்டிகைகள் களைக்கட்டும். பார்த்திராத படங்கள், நிகழ்ச்சிகள் என்று ஒளிபரப்பினார்கள் என்றால், அனைவரும் தொலைக்காட்சி முன் அமர்ந்து விடுவார்கள்.

இப்படித்தான் வரும் திங்கள் ஆயுத பூஜை தினத்தன்று காலை 11 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் கொலைகாரன் படத்தை ஒளிபரப்ப உள்ளார்கள்.

கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து இருக்கிறார். கூடவே ஆக்ஷன் கிங் அர்ஜுனும் படத்தில் இணைந்து நடித்து இருப்பது சிறப்பு.

விஜய் ஆண்டனி அர்ஜுன்

விஜய் ஆண்டனி அர்ஜுன்

நடிகர் விஜய் ஆண்டனி தனி பாணியில் பயணித்துக் கொண்டு இருப்பவர். அவர் தேர்வு செய்யும் படங்களும் வித்தியாசமாக இருக்கும்.. அவர் நடிக்கும் படத்தின் பெயர் தலைப்புக்கள் சும்மா அதிரடியாக, மிரட்டலாக இருக்கும். பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான், சைத்தான், எமன் அண்ணாதுரை, கொலைகாரன் என்று இப்படி வரிசையாக சொல்லலாம்.

திருநெல்வேலி விஜய் ஆண்டனி

திருநெல்வேலி விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி திருநெல்வேலிக்காரர்...நிறைய இசைக் கருவிகள் வாசிப்பதில் வல்லவராக இருந்த இவரை, சர்ச் ஃபாதர் நீ இனிமேல் இங்கு இருக்க கூடாது.சென்னைக்கு போய் சினிமாவில் சேர்ந்து ஆக வேண்டியதைப் பார் என்று அனுப்பி வைத்தாராம். அப்போது சென்னைக்கு வந்த விஜய் ஆண்டனி இசை அமைப்பாளராக அறிமுகமாகி டிஷ்யூம் படத்தின் பாடல்கள் மூலம் பிரபலம் ஆனார்.

விஜய் ஆண்டனியின் நான்

விஜய் ஆண்டனியின் நான்

பின்னர் விஜய் ஆண்டனி இசை அமைத்து நடித்தும் வெற்றி கண்ட படம் நான். சைலன்ட் கில்லர் மாதிரி நடித்து அமர்க்களம் செய்து இருப்பார்.கடைசியில், நல்லது செய்வது போல காண்பித்து இருப்பார்கள். இப்படி நடிகராக அறிமுகம் ஆன விஜய் ஆண்டனி இன்று பெரிய நடிகராகி உள்ளார்.

இரு மாங்காய்

இரு மாங்காய்

இவரை வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல நடிப்புக்கு, இசைக்கு என்று பேக்கேஜ் சம்பளம் பேசி முடித்துவிடலாம் .பாடல்கள் ஹிட் கொடுப்பது, பின்னணி இசையில் ஸ்க்கோர் பண்ணுவது என்று கலக்கி விடுவார். இப்படியான ஒரு படமான கொலைகாரன் படத்தை விஜய் டிவி ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்ப உள்ளது.பார்த்து மகிழுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+