அய்யனார் துணை அப்டேட்: சோழனுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலா.. வானதியால் உடையும் குடும்பம்! அடுத்த சம்பவம் ரெடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial Feb 21 Episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 21ஆம் தேதிக்கான எபிசோடில், நடேசன் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறுகிறது. அதே நேரத்தில் வானதி காதலுக்கு வீட்டில் கிரீன் சிக்னல் காட்டி இருக்கின்றனர். இனி திருமண ஏற்பாடுகளை வைத்து பாண்டியன் வாழ்க்கையில் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு
அய்யனார் துணை சீரியலின் (Ayyanar Thunai serial today episode) இன்றைய எபிசோடில், பொங்கல் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்குகிறது. வீட்டு வாசலில் கோலம் போட நிலா எல்லோரையும் கூப்பிட்டுகிறார். பொங்கல் பானை கோலம் போட வேண்டுமென்று முடிவு செய்து, மொபைலில் என்ன மாதிரி கோலம் போடலாம் என்று பார்த்து, அதைப் பேப்பரில் முதலில் வரைந்து பார்க்கிறார். பிறகு அதே கோலத்தை வாசலில் வரைய ஆரம்பிக்கிறார். அதை பார்த்த சோழன், "இது பொங்கல் பானை மாதிரி இல்ல, தண்ணி வைக்குற பானை மாதிரி இருக்கு" என்று கிண்டல் அடிக்கிறார்.
பொங்கல் கோலம்
அவர் கிண்டல் செய்தாலும் நிலா பொங்கல் பானை, கரும்பு எல்லாம் சேர்த்து கோலத்தை முடித்துவிடுகிறார். பிறகு எல்லோரையும் கூப்பிட்டு கலர் போட சொல்கிறார். கோலம் முடிந்ததும், "காலையில் 5 மணிக்கெல்லாம் எல்லாரும் எழுந்திருக்கணும்... சூரியன் உதயமாகும் முன்னாடி சாமி கும்பிடணும்" என்று சொல்லி அனைவரையும் தூங்கச் செலுத்துகிறார். சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் எல்லோரும் ஓகே சொல்லி படுக்கிறார்கள்.
காலையில் சொன்னபடி முதல் ஆளாக நிலா எழுந்து சேரனை எழுப்புகிறார். சேரன் உடனே எழுந்து குளிக்க செல்கிறார். பிறகு சோழன், பாண்டியன், பல்லவனை எழுப்புகிறார். இதில் பாண்டியன் மட்டும் எழுந்து ரெடியாக ஆரம்பிக்கிறார். சோழன், பல்லவன் இருவரும் திரும்பவும் தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள். சேரன் குளித்து ரெடியாகிவிடுகிறார். நிலா "நான் குளிச்சிட்டு வர்றதுக்குள்ள நீங்க எழுந்திருக்கணும்" என்று சொல்லிவிட்டு குளிக்கச் செல்கிறார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்தால் இருவரும் இன்னும் தூங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
நிலா கொடுத்த அதிர்ச்சி
அதனால் டென்ஷன் ஆன நிலா ஒரு சொம்பில் தண்ணீர் எடுத்து வந்து இருவர்மேலும் ஊற்றுகிறார். அதற்குப் பிறகு இருவரும் பதறி எழுந்து நிற்கிறார்கள். "உங்க ரெண்டு பேருக்கும் 10 நிமிஷம் தான் டைம்" என்று சொல்லி அவசரப்படுத்துகிறார். பொங்கல் ஸ்பெஷலாக ஆண்கள் எல்லாரும் வேட்டி சட்டை அணிந்து, நிலா சேலை கட்டி ரெடியாகிறார்கள்.
கல்யாணத்திற்கு ஓகே
இதே நேரத்தில் வானதி தனது வீட்டில் குளித்து ரெடியாகி, "நான் பாண்டியன் வீட்டுக்கு போறேன்... அவங்க வீட்டுல பொங்கல் வைக்க போறாங்க" என்று அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு "இங்க மட்டும் பொங்கல் வைக்காம இருக்கோமா?" என்று அம்மா கேட்கிறார். அதற்கு வானதி "முதல்முறையா பாண்டியன் என்னை கூப்பிட்டிருக்கான்... போயிட்டு வந்திடுறேன்" என்று சொல்கிறார்.
அப்போது வானதியின் அண்ணன் "நீ அங்க போகக்கூடாது" என்று பேசுகிறார். உடனே அவர்களின் அப்பா அண்ணனை அடக்கி, "இவ அடங்க மாட்டா... இவளை அந்த பையனுக்கே கல்யாணம் பண்ணி வச்சிடலாம்" என்று சொல்கிறார். அப்போது வானதின் அம்மா நீ அந்த பையன் கிட்ட சொல்லி பொண்ணு பார்க்க வர சொல்லு என்று சொல்கிறார். வீட்டில் இப்படிச் திருமண பேச்சு வந்ததும் வானதி மிகவும் குஷியாகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications