Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அய்யனார் துணை அப்டேட்: வானதி பற்றி நடேசன் சொன்ன உண்மை.. நிலாவுக்கு தெரிய வந்த ரகசியம்! பரபரப்பான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Ayyanar Thunai serial today episode) அய்யனார் துணை சீரியலில் 2026 பிப்ரவரி 25ஆம் தேதிக்கான எபிசோடில், நடேசன் பாண்டியனிடம் வானதி நம்ம குடும்பத்திற்கு செட்டாக மாட்டா, நீ அவளை கல்யாணம் பண்ணுனா உன் வாழ்க்கையே வீணா போயிடும் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் நிலாவுக்கு இன்னொரு உண்மையும் தெரிய வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

அய்யனார் துணை சீரியலில் நேற்றைய எபிசோடில் சோழன், நிலா இருவரும் தங்கள் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது சோழனை போட்டோ எடுக்க அழைத்து சென்ற நிலா, மேக்கப் இல்லாமல் டல் ஆக தெரிந்ததால், சோழனிடம் போனை கொடுத்துவிட்டு உள்ளே மேக்கப் போட சென்றிருந்தார். அந்த கேப்பில் நிலாவுக்கு ராகவ்விடம் இருந்து வாய்ஸ் மெசேஜ் வந்தது. அதைக்கேட்டு கருப்பான சோழன், அவரை திட்டி ரிப்ளை பண்ணுகிறார். இதைப்பார்த்த ராகவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Ayyanar Thunai serial Vijay TV Serial Tamil Serial

அய்யனார் துணை சீரியல் இன்றைய எபிசோடு

இந்த நிலையில், இன்றைய எபிசோடில், (Ayyanar Thunai serial Feb 25 episode) சோழனும் நிலாவும் ஒருபக்கம் ஜாலியாக போட்டோ எடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் வானதி பாண்டியனை தனியாக அழைத்து செல்கிறார். இப்பவே என்னோட அம்மாவும், அப்பாவும் உங்களை பொண்ணு கேட்டு வரச் சொன்னாங்க, அவங்க நல்ல மூடில் இருக்கும் போதே வந்து பேசி முடிச்சிடுங்க, இல்லேனா, அவங்களோட மனசு மாறுனாலும் மாறிடும் என சொல்கிறார்.

அதிர்ச்சியில் பாண்டியன்

அதற்கு பாண்டியன், இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் என தயங்கிக் கொண்டே நிற்க... என்ன பிரச்சனை என வானதி கேட்க, எங்க வீட்டுல இருக்குறது ரெண்டு ரூம் தான், நம்ம கல்யாணம் பண்ணிகிட்டா எங்க போய் தங்குறது அதான் யோசிக்குறேன் என்று பாண்டியன் சொல்கிறார்.

வானதி கேட்ட கேள்வி

அதற்கு வானதி, எதுக்காக உங்க அண்ணிக்கு தனியா அவ்வளவு பெரிய ரூம் கொடுத்திருக்கீங்க. அவங்க செஞ்சதே ஒரு டூப்ளிகேட் கல்யாணம் தான, அவங்களை அந்த ரூமை விட்டு வெளியேறி ஹாஸ்டல்ல இருக்க சொல்லு, நம்ம அந்த ரூமை எடுத்துக்கலாம் என வானதி சொல்ல, உடனே கடுப்பான பாண்டியன் வானதியை திட்டுகிறார். உடனே வானதி, சரி கல்யாணம் பண்ணி நம்ம தனிக்குடித்தனம் போயிடுவோம் என சொல்ல, அதற்கும் பாண்டியன் தயாராக இல்லை. இப்படி இருவரும் சீரியஸாக பேசிக் கொண்டிருக்க, அப்போது பாண்டியனை பல்லவன் உள்ளே அழைத்து செல்கிறார்.

வானதி தன் வீட்டில் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அனைவரிடமும் சொன்னதால், அதுபற்றி பேச பாண்டியனை உள்ளே அழைந்திருந்தார் சேரன். அப்போது அனைவரும் அமர்ந்து பேசி, சூட்டோடு சூடாக போய் பொண்ணு கேட்கலாம் என அனைவரும் முடிவு செய்கிறார்கள்.

நடேசன் சொன்ன அட்வைஸ்

இதையடுத்து வானதி அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் நடேசன் வந்து மகன்களிடம் பேசுகிறார். அப்போது அந்த பெண்ணெல்லாம் உனக்கு செட்டே ஆகாது, அவளை உன்னால் சமாளிக்க முடியாது என கூறுகிறார். இதையெல்லாம் கேட்டுக் கொண்டு அமைதியாகவே இருக்கிறார் பாண்டியன்.

Ayyanar Thunai serial Vijay TV Serial Tamil Serial

ராகவ் சொன்ன விஷயம்

மறுபுறம் நிலா ஆபிஸில் இருக்கும்போது, ராகவ் அவரை தனியாக அழைத்து சென்று, நான் உங்களுக்கு பொங்கல் வாழ்த்து தான சொன்னேன், அதுக்காக நீங்க என்னை இப்படியெல்லாமா திட்டுவீங்க என ராகவ் கேட்க, என்னது பொங்கல் வாழ்த்தா, நான் எதையுமே பார்க்கலயே என அதிர்ச்சியாகுகிறார். அப்போது ராகவ் தன்னுடைய மொபைலை எடுத்து காட்டுகிறார்.

அதற்கு பிறகு தான் நிலாவுக்கு சோழன் தான் இந்த வேலையை பார்த்திருப்பார் என்று தெரிகிறது. இதைச் சொல்லி ராகவ் நிலாவிடம் ஃபீல் பண்ணுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+