அழகம்மையின் குதூகலம்... ஆஹா.. சந்திராவின் ஆனந்தம்.. ஓஹோ..! அங்க மாமியார்.. இங்க அம்மா!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில், நடிக்கும் ரேவதியும், சந்திரகுமாரி சீரியலில் நடிக்கும் விஜி சந்திர சேகரும் நடிப்புல.. ஐயோ பின்றாங்க. சந்திரகுமாரி சீரியல் ஓரளவுக்கு அந்த நேர ரேட்டிங்கில் உசந்துரும்னு சொல்ற அளவுக்கு எளிமையா இப்போ நல்லாருக்கு.

அழகு சீரியலில் சின்ன மருமக பூர்ணா, தான் குடும்பத்துலேர்ந்து பிச்சுக்கிட்டு போறதுலயே கவனமா இருக்கா.. அம்மாவை கண்டு பிடிக்க 9 சுமங்கலிகளிடம் அரிசி மடிப்பிச்சை வாங்கி, அம்மனுக்கு பொங்கல் வச்சா உன் அம்மா கிடைப்பாங்கன்னு ஜோதிடர் சொல்றார்.

பூர்ணாவும் பிச்சை எடுக்கறா.. மகேஷுடன் கோயிலுக்கு கிளம்பு, சுதாவின் கிளையன்ட் கார் பூர்ணா கையில் வச்சிருந்த பையில் மோதி, அரிசி பானை உடைந்து அரிசி தெருவில் கொட்டிடுது. பூர்ணா உடைஞ்சு போறா. உனக்கு எங்கியோ இருக்க அம்மாவைப் பத்தி கவலை. எனக்கு அம்மா யாருன்னே தெரியாத கவலை.. என் கவலை உனக்கு புரியாது.. உன்னாலதான் எல்லாம் போச்சுன்னு சொல்றா.

பூர்ணா மயக்கம்

பூர்ணா மயக்கம்

சரி ராத்திரிக்கு நாம் இந்த வீட்டை விட்டு யாருக்கும் தெரியாம போயிருவோம் ராஜேஷ்ன்னு சொல்றா. அதுப்படி ரெண்டு பேரும் கிளம்பு, திடீர்னு பூர்ணா மயக்கம் போட்டு விழுந்துடறா. எல்லாரும் முழிச்சுக்கறாங்க.. டாக்டர் வந்து பார்த்துட்டு, பூர்ணா, ரேவதியை தனியா அழைச்சுக்கிட்டு போயி ரூம்ல டெஸ்ட் பண்றாங்க.

நீங்க தாத்தா

நீங்க தாத்தா


ரவிப்பா.. ரவிப்பான்னு ரூமிலிருந்து ரொம்ப குதூகலமா ஒடி வர்றாங்க அழகம்மை. முகத்துல ஒரு இனம் புரியாத சந்தோசம், குதூகலம்,, ஆனந்தம் பொங்கி வழிய நான் பாட்டியாக போறேன்னு சொல்றாங்க.. நீங்க தாத்தா ஆகப் போறீங்கன்னு சொல்லிட்டு இருங்கன்னு சர்க்கரை எடுக்க ஓடறாங்க. அழகம்மை ரேவதியின் நடிப்பு அபாரம்.

இந்த மாதிரி காட்சிகள் உண்மையானதா தெரியணும்னா ரேவதி மாதிரி நடிகைகள் தேவைப்படறாங்க.இங்க ஒரு மாமியாரா ரேவதியின் நடிப்பு அருமை.

நீ எப்படிம்மா இருக்கே..

நீ எப்படிம்மா இருக்கே..

சந்திரகுமாரி சீரியலில் சந்திரா ஒரு வழியா உயிர் பிழைச்சு, பொண்ணு அஞ்சலி என்ன பண்றாளோன்னு தவிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களை காப்பாத்தினவர் வீட்டுல ரெண்டு பொண்ணுங்க..இவங்களை அம்மாவா நினைச்சு அன்பா இருக்காங்க.அஞ்சலிக்கு போன் பண்ணினப்போ எல்லாம் அவ எடுக்கலைன்னு ரொம்ப கவலையா இருக்காங்க.

போன்

போன்

என்ன இத்தனை மிஸ்டு காலா இருக்கேன்னு அந்த வீட்டு பொண்ணு போன் செய்து பார்க்க, அங்க பேசறது நம்ம வீட்டுல இருக்க சந்திரா அம்மா பொண்ணு அஞ்சலிதான்னு தெரிஞ்சுக்கிட்டு, அம்மா உங்க பொண்ணு அஞ்சலி போன் பண்றாங்கன்னு சொல்றா.

நடிப்பு அபாரம்

நடிப்பு அபாரம்


சந்திரா அம்மா ஒடி வர்றாங்க.. அஞ்சலி..அஞ்சலி.. நீ எப்படிம்மா இருக்கே.. உனக்கு ஒண்ணும் இல்லையேன்னு அழுதுகிட்டு கேட்க. பார்ப்பவர்களுக்கும் ஆனந்த கண்ணீர். அந்த பக்கம் மகளின் குரல் இந்த பக்கம் அம்மாவின் பரிதவிப்பு..இந்த இடத்துல ஒரு அம்மாவா விஜி சந்திரசேகரின் நடிப்பு அற்புதம்.

திறமையால் ரசிகர்களை கவர்வதற்கு வயதில்லை எந்த வயதிலும் பெண்கள் இந்த சாதனையை செய்யலாம் என்று இருவருமே இந்த சீரியல்கள் மூலம் நிரூபித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+