Azhagu Serial: அழகம்மையை அங்கேயே வச்சுடலாமா சித்தி?
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் எப்படி ஆரம்பிச்ச கதை எப்படி எப்படியோ திசை மாறி சென்றுக்கொண்டு இருக்கிறது. புதிதாக வீட்டுக்கு வந்த மல்லிகா பழனிச்சாமியின் ரெண்டாவது சம்சாரம் என்று சொல்லி கதையை புது திசையில் திருப்பறாங்களாம்...
வீட்டில் சுதா கிரிமினல் லாயரா இருந்துக்கொண்டு மல்லிகா சொல்வதை கேட்டு பயத்தில் இருப்பது.. மல்லிகா குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கக் கூடத் தெரியாமல் சுதா அப்பு அப்பு என்று அடிக்கடி அழுவது...சோகத்தில் நிற்பது..மக்களை முட்டாளாக்கும் இந்தக் காட்சிகளை பார்க்க கேவலமா இருக்குதுங்க.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் கூடவே அம்மா மாதிரி அம்மா மாதிரி என்று மாமியாரை புகழ்ந்து, சுதா அம்மா என்று கூப்பிடும் அழகம்மை இப்போதும் இல்லை.

அழகம்மையை வச்சுடலாமா
அழகம்மை மல்லிகாவின் கிராமத்துக்கு வந்தருக்கறதா ஒரு போன் வருது. அதாவது அழகம்மை மல்லிகாவின் கிராமத்துக்கு போயி, மல்லிகா யாரு.. அவ எப்படிப்பட்ட கேரக்டர்னு விசாரிச்சுட்டு வர போயிருக்காங்களாம். சித்தி அழகம்மையை அங்கேயே வச்சுடலாமான்னு ஒரு புது வார்த்தையை போடுகிறாள் மல்லிகா.

வைக்கறதுன்னா என்னடி
வைக்கறதுன்னா என்னடின்னு மல்லிகாவின் சித்தி கேட்கறாங்க..அதான் சித்தி அங்கயே கொன்னு புதைச்சுடலாமான்னு கேட்கிறேன்னு சொல்றா மல்லிகா. பொறு பார்த்துக்கலாம்னு சித்தி சொல்ல போகிற போக்கைப் பார்த்தால் அழகம்மையை அங்கேயே கொன்னுட்டோம்னு மல்லிகா சொல்லி, ரேவதியை சீரியலில் இருந்து எடுத்துருவாங்க போலிருக்கு.

கதை கோர்வை
கதையில் கோர்வை இல்லை என்று பார்க்கும் ரசிகர்கள், எங்களுக்கு பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு.. உங்களுக்கு என்று கமெண்ட்ஸ் போடுகிறார்கள். ஆரம்பத்தில் ரவிக்கு பைத்தியம் புடிச்சு அப்போ பூர்ணா என்கிற நியாயமான காரணத்தை சொன்னார்கள். இப்போது ரசிகர்களுக்கு பைத்தியம் புடிச்சதுக்கு என்ன காரணத்தை சீரியல் குழு சொல்லுமோ...

சகுந்தலா தேவி லாயர்
அழகு சீரியலுக்கு உண்மையான பிளஸ் என்று பார்த்தால் லாயர் சகுந்தலா தேவி.. அதாவது நடிகை காயத்ரி ஜெயராம்தான். அழகான வில்லியாக ரசிக்கப்பட்ட பூர்ணா கடந்த சில எபிசோட்களில் இல்லை. கடந்த பல எபிசோட்களாக பூர்ணாவுக்கு சுத்தமா வேலையே இல்லை. அழகு சீரியல் திக்குத் தெரியாமல் பயணித்து வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications