Sundarai Neeyum Sundaran Nanum Serial: விடிய... விடிய சொல்லித் தருவேன்!
சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் தமிழும், வேலுவும் விடிய விடிய போனில் பேசறாங்க.. ஆனால், இன்னும் காதலை சொல்லிக்கலைங்க!
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அழகன் திரைப்படத்தில் கதாநாயகி பானுப் பிரியாவும், கதையின் நாயகன் மம்முட்டியும் விடிய விடிய போனில் பேசிக்குவாங்க.
அது கடைசியில் காதலை பற்றிய பேச்சாக இருக்காது. ஆனால், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதை அருமையாக காண்பித்து இருப்பார் கேபி சார்.

தமிழ் வேலு
வேலுவுக்குத்தான் தமிழ்ச்செல்வியை கல்யாணம் செய்து வைக்கணும்னு பாட்டி ஆசைப்படறாங்க. ஆனால், இவங்க இருவரும் எப்போதும் முட்டி மோதிக் கொண்டு சண்டை போடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.இவர்களை ஒன்று சேர்க்க படாத பாடு படறாங்க பாட்டி.

சண்டை பாட்டியுடன்
கடைசியில் பாட்டியுடன் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருந்துவிடுகிறாள் தமிழ்ச்செல்வி. பாட்டி தமிழை தேடி வரும் போதும் கறாராக பேசிய தமிழுக்கு,பாட்டியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. ஒளிந்து ஒளிந்து பார்ப்பதை அறிந்த பாட்டி அவளே வரட்டும் என்று கண்ணா மூச்சு விளையாட்டு காண்பிக்கறாங்க.

இருவரும் நெருக்கம்
இந்த நேரத்தில்தான் தமிழுக்கு விபத்து ஏற்பட்டு அவளை வேலு காப்பாற்றுகிறான். என்னைத் தூக்கிட்டு வந்து ஆஸ்பிடலில் சேர்த்தியான்னு பொய் கோபம காண்பிக்கும் தமிழ்ச்செல்விக்கு வேலுவின் மீது காதல் மலர்ந்துருது. வீட்டுக்கு வந்துவிட்ட தமிழ் வேலு போன் பண்ணுவானா என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறாள்.

லக்கி வேலு
வேலு தமிழுக்கு போன் செய்ய அருமையான வாய்ப்பாக அவளின் ஹேண்ட் பேக் இவனது ஜீப்பில் இருப்பதை தங்கை கொண்டு வந்து தருகிறாள். உடனே இதை சாக்கா வச்சு தமிழுக்கு போன் செய்ய.. உடனே எடுத்துடணுமா என்று அவள் பேசாமலிருக்க... எடுக்க மாட்டாளே.. இவன் திட்ட இப்படி போகிறது போன் விஷயம்.

போன் பண்ணட்டும்
அவளே போன் பண்ணட்டும்..அவளுக்கென்ன கொழுப்பு என்று இவன் இருக்க.. ஒரு தடவை கூப்பிட்டு விட்டுடிவியா? இன்னொரு தடவை கூப்பிடேன்னு இவள் சொல்ல.. அவளே கூப்பிடறா. உடனே எடுக்க கூடாதுன்னு இவன் நினைக்க.. எடுக்கமாட்டானே என்று அவள் திட்ட.. ஐயோ எடுக்கலேன்னா அப்புறம் பேசாமா விட்டுட்டா என்ன பண்றதுன்னு என்று இவன் எடுத்துட்டு பேசறான்.

விடிய விடிய பேச்சு
அவள் என்ன சொல்லுன்னு பேசப் பிடிக்காதவள் மாதிரி கேட்க.. இல்லை தூக்கம் வரலேன்னு பேசினேன்..இப்போ தூக்கம் வருது சரி வைக்கிறேன்னு சொல்றான். எனக்கும்தான் தூக்கம் வரலே பேசு பேசுன்னு இவள் சொல்ல அப்படியே விடிய விடிய பேசிக்கிட்டே இருக்காங்க.












Click it and Unblock the Notifications