eeramaana rojaave serial: அகிலா முதுகில் பெரிய மச்சமா இருக்குது....புகழ் சந்தேகம்!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மனைவி அகிலாவுக்கு முதுகில் பெரிய மச்சம் இருக்குதுடா..போயி பாருடா நான் சொன்னது உண்மையா இல்லையான்னு தெரியும்னு புகழிடம் அழகர் நக்கலா சொல்றான்.
ஆனால், இது சீரியசான விஷயம்தான்.. இதை நடுவுல ரொம்ப காலம் விட்டுட்டு, சீரியலில் மறுபடியும் கையில் எடுத்து இருக்கறது ஈரமான ரோஜாவே சீரியல் கதைக்குழு.
முதலில் பொண்டாட்டி அகிலாவிடம் கேட்காமல் எப்போதும் கெடுதலே நினைக்கும் பெரியம்மா பொண்ணு மற்றும் பவுனுகிட்டே சொல்லி பார்க்க சொல்றான். அவங்க இருக்குன்னு பொய் சொல்றாங்க.

வீடியோ சர்ச்சை
அகிலாவை அவளுக்கு தெரியாம எடுத்த வீடியோ சர்ச்சையாலதான் அகிலா கல்யாணமே நின்னு போகுது. அக்கா மலரை கல்யாணம் செய்துகிட்ட வெற்றி தனது தம்பி புகழை விட்டு அகிலா கழுத்தில் தாலி கட்ட வைக்கிறான். ஆனால், அந்த வீடியோவை எடுத்த அழகர் புகழை வம்பிழுக்க வேண்டி, முன்பு ஓர் முறை உன் பொண்டாட்டி முதுகில் பெரிய மச்சம் இருக்குடா எனக்குத் தெரியும், உனக்குத் தெரியுமான்னு கேட்கிறான்.இப்போது மறுபடியும் கேட்டு விட்டான்.

ஒரு உருப்படி
நிறைய மது அருந்தி போதையில் இருந்த புகழ் பொண்ட்டாடி மலர்கிட்டே வந்து உன் முதுகில் பெரிய மச்சம் இருக்கான்னு கேட்டுடறான். கொந்தளிச்சு போகும் அகிலா பேசும் டயலாக் ஒண்ணுதாங்க இதுவரைக்கும் ஈரமான ரோஜாவே சீரியலில் உருப்படியான ஒரு விஷயம். தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியல் பார்க்கறவங்களுக்கு அது தெரியும்.

சங்க அறுத்து
கோபத்தின் உச்சிக்கு போன அகிலா, இதுவே உன் தங்கச்சியை பார்த்து எவனாவது இப்படி அவ முதுகில் மச்சத்தை நான் பார்த்தேன்னு சொல்லி இருந்தா அவன் சங்க அறுத்து உன் அக்கா தங்கச்சி காலில் போட்டு இருப்பேல்ல? அது மாதிரி பொண்டாட்டி என்னை ஏண்டா நினைக்கலே? ஆளாளுக்கு ஒரு நியாயமா? மத்த பொண்ணுங்களுக்கு நீ குடுக்கற மரியாதை இவ்ளோதானா?

ஜிம்பாடி ஆம்பளையா?
நான் கூட ஜிம்பாடி வச்சு இருக்கியே.. நல்ல வீரமான ஆம்பளைன்னு நினைச்சேன். சீ..இன்னொரு தடவை எவனோ ஒருத்தன் இப்படி கேட்டான் அப்படி கேட்டான்னு வந்து என்கிட்டே கேட்டே.. காரி கீழே துப்ப மாட்டேன்.. உன் மூஞ்சியில் துப்புவேன்னு சொல்றா. உண்மையில் சந்தேகப்படும் ஆண்களுக்கு ஒரு நல்ல சவுக்கடியான வசனம் இது. அத்தோடு பொண்டாட்டியை யாராவது வீடியோ எடுத்துட்டு, அவள் புருஷன்கிட்டே இதை சொல்லி சொல்லி வெறுப்பேத்தறவங்களுக்கும் இந்த வசனம் நல்ல பதிலடி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications