மக்களிடம் இருந்து தப்பிக்கிறதே பெரும் பாடா இருக்கு...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகு சீரியலில் பூர்ணாவாக நடித்து வரும் சங்கீதா, சன் மியூசிக் தொகுப்பாளினியாக இருந்தபோதே சன் டிவியின் அழகு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அழகு சீரியலின் பெரும் வில்லி, பூர்ணா கதாபாத்திரம்தான்.

வில்லியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து வெளியில் செல்லும்போது மக்களிடம் இருந்து தப்பிப்பதே பெரும் பாடாக இருக்கிறது என்று கூறியுள்ளார். கோவிட் தொற்று லாக்டவுன் நேரத்தில் சீரியல்கள் ஒளிபரப்பாகாமல் இருந்தாலும், சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள் பங்கேற்று வருகின்றனர்.

வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் பங்குபெற்ற சங்கீதா பல விஷயங்கள் குறித்து பேசினார். அப்போதுதான் மக்களிடம் இருந்து தப்பிக்கிறதே பெரும் பாடா இருக்குன்னு சொன்னார்.

 நடிப்பு ஆங்கரிங்

நடிப்பு ஆங்கரிங்

ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது நாம நினைச்சதை பேசிடலாம். நம் எண்ணங்களையும் மற்றவர் ஏற்றுக்கொள்ளும்படி பேசிவிடலாம். ஆனால், நடிப்பு எனும்போது, ஸ்கிரிப்டில் உள்ளபடிதான் -பேச வேண்டும்.. அதற்கான நடிப்பைத் தர வேண்டும்..கேரக்டரா மாறித்தான் பேசணும்...ஆங்கரிங், நடிப்பு இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.

 அழகு வேண்டாம்

அழகு வேண்டாம்

அழகு சீரியலில் வில்லியா நடிக்கணும்னு கொஞ்ச எபிசோட் போனத்துக்குப் பிறகுதான் தெரிஞ்சுது. இல்லை சார்.. என்னால அப்படி நடிக்க முடியாது. அது எனக்கு வரவும் வராது என்று சொல்லிட்டு வந்துட்டேன். இல்லை.. நல்லா நடிக்கலாம்.. ஸ்கோப் இருக்குன்னு சொல்லி நடிக்க வச்சாங்க. ரேவதி மேம் வில்லின்னா இப்படி கெத்து காட்டணும்..இப்படி உட்காரணும் அப்படின்னு சொல்லித் தந்தாங்க என்று கூறினார்.

 ரேவதி மேம் தலைவாசல் விஜய்

ரேவதி மேம் தலைவாசல் விஜய்

ரேவதி மேம் தினம் ஒரு விஷயத்துக்கு பாராட்டுவாங்க. விஜய் சார். முதல் நாளே செட்டில் எனக்கு ரொம்ப நெருக்கமாகிட்டார். ஒரு பெட் மாதிரி என்னை செல்லமா ட்ரீட் பண்ணுவார் என்று கூறினார். விஜய் சங்கீதாவை செல்லமாக ஒட்டுண்ணி என்று அழைப்பாராம்.

 வில்லியா நடிச்சால்

வில்லியா நடிச்சால்

வில்லியா நடிச்சா மக்கள் மத்தியில் இவ்ளோ பேர் புகழ் கிடைக்கும்னு எனக்கு அப்போ தெரியலை. சன் குடும்ப விருது வழங்கும் விழாவில் விருது குடுத்தப்போதான் புரிஞ்சுது.கடைக்கு பால் வாங்கலாம்னு முகத்தை மூடிக்கிட்டு போனால் கூட கண்ணை வச்சு கண்டு பிடிச்சுடறாங்க. நில்லு.. நீ பூர்ணாதானேன்னு கேட்கறாங்க. அவங்களை சமாளிச்சு தப்பிச்சு வரத்துக்கே போதும் போதும்னு ஆயிருதுன்னு சொன்னார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+