Azhagu Serial: பூர்ணா குட்டு வெடிச்சு போச்சு.. அழகம்மை அதிர்ச்சி!
சென்னை: சன் டிவியின் மாலை நேர சீரியல் அழகு. இந்த சீரியலை நடிகை ரேவதிக்காக ரசித்து பார்ப்பவர்கள் ஏராளம். அவர் இந்த சீரியலில் அழகம்மையாக வாழ்ந்து வருகிறார்.
வயசானாலும், அழகு குறையவில்லை ரேவதிக்கு என்று கூறுவதை விட, அவங்க நடிப்பு ஸ்டைல் மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். அப்படி நடிப்புக்கு புகழ் பெற்றவர் ரேவதி.
சில நாட்களுக்கு சில காட்சிகளில் என்று நடிகை ரேவதி அழகம்மையாக நடித்தாலும், அழகு சீரியலில் தினமும் அழகம்மை வருவது போலவே சீரியல் அவரின் இருப்பை உணர வைக்கிறது.

கெடுக்க வந்த பூர்ணா
பூர்ணா தனது லாயர் அம்மாவின் ஆலோசனைப்படி, அழகம்மை குடும்பத்தை சிதைத்து, தனித் தனியாக வீட்டை விட்டு வெளியில் ஓட வைக்கப் போகிறேன் என்று சபதம் விட்டு வீட்டுக்கு வருகிறாள். முதலில் அவளது பரம எதிரியான சுதா, ரவியை குறி வைத்து, ரவியை பைத்தியம் பிடிக்காத குறையாக மனதளவில் டிப்ரஷன் தருகிறாள்.

கண்டுபிடித்த சுதா
இதை டிடெக்டிவ் வச்சு கண்டு பிடிச்சுட்ட சுதா, ஆதாரங்கள் வைத்து இருந்தாலும் ரவி, தம்பி மகேஷின் குடும்பம் சிதைந்து போய்விட கூடாது, அதோடு, மகேஷின் தம்பி மனைவிதான் பூர்ணா என்பதால் நல்ல எண்ணத்தோடு, இதை வீட்டில் சொல்ல மறுக்கிறார்கள் இருவரும். ஆனால், சுதா தப்பிச்சு, தன்னோட நாடகத்தை கண்டுபிடிச்சுட்டா என்று தெரிந்த ஆத்திரத்தில் காரை வேகமாக ஒட்டி வந்த பூர்ணா, கார் சிறு விபத்துக்கு உள்ளானது, அவள் வயிற்றில் அடிபட்டு சிசு அழிந்து விடுகிறது.

சாதகமாக பயன்படுத்தி
இதை சாதகமாக பயன்படுத்தி, சுதாவையும், ரவியையும் வீட்டை விட்டு துரத்த பிளான் செய்து அனுப்பியும் விட்டாள் பூர்ணா.இப்போது அடுத்த டார்கெட்டாக சுதாவின் குழந்தையைத் தூக்க திட்டம் போட்டு பேசிக்கொண்டு இருந்ததை அழகம்மையும், அவங்க பொண்ணு பூர்ணாவும் கேட்டுடறாங்க. அதிர்ச்சியில் மூவரும் நிற்க, பூர்ணாவுக்கு உண்மை தெரிந்து விட்ட அதிர்ச்சி.

படிப்பு காவ்யா
தன் மகன் மதன் அழகம்மையின் மகள் காவ்யாவை கல்யாணம் செய்து கொண்டு வந்தது பிடிக்காத சகுந்தலா தேவி, காவ்யாவை வீட்டு வேலைக்காரி மாதிரி ட்ரீட் செய்யறாங்க. டாக்டருக்கு படிக்க நீட் எக்ஸாம் எழுத விடாமல் செய்யறாங்க. இவங்க ஒரு பக்கம் இந்த குடும்பத்துக்கு துரோகம் செய்துகிட்டு இருக்காங்க. இப்படி போகுது இந்த சீரியல்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications