Azhagu Serial: அழகுன்னு சொல்றீங்க... அழகம்மையை காணலையே...?
சென்னை: நடிகை ரேவதி வயதானாலும் கூட ஒரு தனி அழகு...அந்த மண்வாசனை அழகிய சிரிப்பு அவரிடம் இருந்து இன்னும் விலகவே இல்லை. என்னதான் துறுதுறுப்பான கேரக்டர்களில் நடித்து இருந்தாலும், குடும்பப்பாங்கான தோற்றம் அவரிடம் என்றும் மிஸ் ஆகாது.
சன் டிவியின் அழகு சீரியலின் சீரியல் காஸ்ட் நடிகை ரேவதிதான். அவருக்காக இந்த சீரியலைப் பார்த்தவர்கள் ஏராளம். ஆனால், கடந்த ஒரு மாதமாகவே அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் ரேவதி இல்லாமலே கதை ஓடுகிறது.
முக்கியமான குடும்பப் பிரச்சனை காட்சிகளில் கூட ரேவதி இல்லை. வீட்டுக்கு வந்து சம்பந்தி எங்கேன்னு கேட்டால் கோயிலுக்கு போயிருக்காங்க அங்க போயிருக்காங்க.. இங்கே போயிருக்காங்கன்னு சமாளிச்சுடறாங்க.

நடிகை காயத்ரி
மஞ்சள்காட்டு மைனா பாடலழகி நடிகை காயத்ரி ஜெயராம் தவறாமல் அனைத்து காட்சிகளிலும் ஆஜராகி விடுகிறார். இவரும் கதைக்கு முக்கியம் என்பதால், அதுவும் பலருக்கும் பிடித்த நடிகை என்பதால் சீரியலை பார்ப்பவர்கள் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

நடிகை ரேவதி
நடிகை ரேவதி படங்களில் நடிக்க கிளம்பி விட்டாரோ என்னவோ.. அவர் ஸ்தானத்தில் இன்னும் யாரையும் வைக்காமல் அவ்வப்போது வந்து தலைக் காட்டினால் அல்லது முக்கிய காட்சிகளில் முழு மூச்சாக நடித்துவிட்டால் போதும் என்று விட்டு வைத்து இருக்கிறார்கள் போலும்.

சுதா பூர்ணா
சுதா எந்த அளவுக்கு பொறுமையோ அந்த அளவுக்கு ஆங்காரமான கதா பாத்திரமாக பூர்ணா இருக்கிறாள். நிஜமா ஒவ்வொரு குடும்பத்திலும் பூர்ணா மாதிரி ஒரு கதாபாத்திரம் இருந்தால் நாடு தாங்காது. இந்த எரிச்சலைப் போக்கவாவது நடிகை ரேவதியை கொண்டு வந்துவிடுங்கள்.

ரேவதி பிளஸ்
ரேவதி வழக்கம் போல சீரியலில் வந்துகொண்டே இருந்தால் சீரியலின் மைனஸ் கூட பிளஸாகிவிடும். எதற்காகவாவது,யாரையாவது பிடித்து இருந்து அந்த சீரியலைப் பார்ப்பவர்களை வெறும் போஸ்டரில் மட்டும் போட்டே சீரியல் எடுப்பவர்கள் ஏமாற்றி விடுகிறார்கள். இந்த மெத்தனம் சரியில்லை.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications