Azhagu Serial: அழகு குடும்பத்தில் அண்ணன் தம்பி அடிதடி... பூரிப்பில் பூர்ணா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மையாக நடிக்கும் நடிகை ரேவதி சீரியலுக்கு கூடுதல் பிளஸ். அவங்களை பார்த்தாலே நம்ம குடும்பத்தில் ஒருவரை பார்த்த மகிழ்ச்சி.

குடும்பத்தை கட்டுக் கோப்பாக பாதுகாத்து வச்சிருந்தாங்க அழகம்மை. அந்த குடும்பத்தில் பூர்ணா தனக்கு ரவி அத்தான் கிடைக்கவில்லை, எங்கிருந்தோ வந்த ரவி அத்தானின் நண்பன் இறந்து விட , அவனது மனைவி சுதாவை ரவி அத்தான் சந்தர்ப்ப வசத்தால் கல்யாணம் செய்துக்கறான்.

அங்கே அப்போது ஆரம்பிக்குது சுத்தா மீது பூர்ணாவுக்கு பகை. சுதாவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திட பல கேவலமான வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறாள் பூர்ணா.

சகுந்தலா தேவி பூர்ணா

சகுந்தலா தேவி பூர்ணா

பூர்ணாவின் அம்மா அப்பா வேற யாரோ... நான் குப்பைத்தொட்டியில் இருந்துதானே உன்னைத் தூக்கி எடுத்து வளர்த்தேன்னு பூர்ணாவை வளர்த்த வசந்தா அம்மா சொல்ல, அப்போது அம்மாவைத் தேடி அலையும் பூர்ணாவுக்கு கோடீஸ்வரி லாயர் சகுந்தலா தேவிதான் தனது அம்மான்னு தெரிஞ்சு ஒண்ணு சேர்ந்துடறாங்க., விதி பாருங்க அங்கேயும் விளையாடுது.

மகன் மதன்

மகன் மதன்

சகுந்தலா தேவியின் மகன் மதன், பூர்ணாவின் நாத்தனார் காவ்யாவை கல்யாணம் செய்து இருக்கான்.,அதுவும் காதல் கல்யாணம்.சோ, இப்போ அம்மாவும், பூர்ணாவும் சேர்ந்து திட்டம் போடறாங்க... அழகம்மை குடும்பத்தை குருவிக் கூட்டை கலைப்பது போல கலைச்சு ,கதற கதற அழ விடணும் என்று.

திரும்ப பூர்ணா

திரும்ப பூர்ணா

கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு போன பூர்ணா திருந்தினவள் போல நாடகமாடி அழகம்மை வீட்டுக்கு மருமகளா திரும்பவும் வருகிறாள். ரவி அத்தனை பைத்தியம் ஆக்கும் முயற்சியில் இருக்க, அதை கண்டுகொண்ட சுதா புருஷனை காப்பாத்திடறா.அடுத்து சுதாவின் குழந்தை அப்புவைத் திட்டமிட்டு, அவளின் முதல் புருஷன் தம்பி பாஸ்கருடன் சேர்ந்து அப்புவை கடத்திடறா.

குட்டு பூர்ணா

குட்டு பூர்ணா

பூர்ணாவின் போன் பேச்சை கேட்டுவிட்டு அழகம்மை துடித்து போறாங்க. இல்லவே இல்லைன்னு சாதகிக்கறா பூர்ணா. ரவியின் தம்பி திருநாவும் சேர்ந்து பூர்ணாவை குற்றம் சாட்ட, அப்பா அம்மாவை திட்டுகிறான் பூர்ணாவின் புருஷன் மகேஷ்.இது அவன் தம்பிக்கு கோவத்தை வரவழைக்க இருவரும் அடிச்சுக்கறாங்க. பூர்ணாவுக்கு குடும்பம் இப்படி மாறிடுச்சேன்னு சந்தோசம்.

அழகம்மை குடும்பம் சிதறிய பின்னர்தான் பூர்ணா அடங்குவாள் போலும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+