Azhagu Serial: பொம்பளை பிள்ளையோ...ஆம்பளை புள்ளையோ இப்படியா வளர்ப்பாங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மைதாங்க ஹைலைட். சூப்பர் மாம். அவர் வரும் காட்சிகள் அவரின் வயோதிக அழகை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

இன்னும் கொஞ்ச நேரம் அவங்க பேசறதை காண்பிக்க மாட்டங்களான்னு ஏங்க வைக்குது. வயசானாலும் ரேவதி மவுசு குறையலீங்க. ஏனோதானோன்னு நடிக்காமல் தனது சுபாவத்தை அப்படியே காண்பித்து இயல்பாக நடிச்சு இருக்கார்.

அழகு சீரியலுக்கு வியூவர்ஸ் அதிகரிக்க ரேவதி ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் மறுக்க முடியாது. ரேவதி இடத்தை இன்னும் எந்த வளர்ந்து வரும் நடிகையும் பிடிக்கலை என்றுதான் சொல்லணும்.

சுதா பூர்ணா

சுதா பூர்ணா

பூர்ணா ரவி அத்தானை கல்யாணம் செய்துக்கணும் என்று ஆசையாக இருக்க, ஆனால், ரவியோ சந்தர்ப்ப வசத்தால், நண்பன் இறந்துவிட, அவனின் மனைவி சுதாவை கல்யாணம் செய்துக்க நேரிடுது. இதனால் சுதாவின் மீது பூர்ணாவுக்கு அளவு கடந்த வெறுப்பு. ஆனால், ரவி அத்தானின் தம்பி மகேஷை கல்யாணம் செய்து வச்சுடறாங்க.

போச்சு நம்பிக்கை

போச்சு நம்பிக்கை

அன்றிலிருந்து சுதா பூர்ணாவுக்கு பரம எதிரியாகி விடுகிறாள்.சுதாவை வீட்டை விட்டு துரத்த அவள் செய்யும் கேவலமான காரியங்கள் ஏராளம். .சுதாவின் முதல் கணவனுக்கு பிறந்த அப்புவை கடத்தும் அளவுக்கு துணிந்து விடுகிறாள். இப்போது குழந்தை கடத்திய பூர்ணா எந்தவித தண்டனையும் இல்லாமல் மறுநாளே ஜாமீனில் வெளிவந்து விடுகிறாள்.

குழந்தை கடத்தல் எத்தனை பெரிய விஷயம் சட்டத்தின் மீது நம்பிக்கை போச்சுங்க.

பிசாசா? பெண்ணா

பிசாசா? பெண்ணா

பூர்ணா எப்படி தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் மகள் என்று தெரிந்ததோ, அதே போல சுதாவும் சகுந்தலா தேவியின் காணாமல் போன முதல் பெண் குழந்தை என்று சகுந்தலா தேவிக்கு தெரியுது. ஆனால், பூர்ணா கத்தி கலாட்டா செய்து, அவளை இந்த வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வர கூடாதுன்னு டிராமா பண்றா செத்துருவேன்னு மிரட்டுகிறாள்.

ஓங்கி கன்னத்துல ஒரு அடி குடுக்க வேணாம்... பொண்ணை இப்படி வளர்க்கறீங்க.. அவள் பெண்ணா பிசாசா?

மீண்டும் குழந்தை

மீண்டும் குழந்தை

திருந்தாத பெண்ணான பூர்ணா அக்காவின் குழந்தை என்று தெரிந்து மீண்டும் சுதாவின் குழந்தையை கடத்தத் திட்டமிடுகிறாள். தயவு செய்து கதைக்காக எதை வேணும்னாலும் கதையில கோர்த்து விட்டுட்டு சும்மா பொறுப்பு இல்லாமல் போயிறாதீங்க. கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேறு ஒரு முடிச்சு புதுசா போடாதீங்க.

நியாயம் கேட்கிறேன்... குழந்தை கடத்தலுக்கு தீர்வு சொல்லுங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+