Azhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் நிஜமா குடும்ப சீரியல் லிட்ஸ்ட்டில் வராதது போலத்தான் இருக்கிறது. பூர்ண ஒரு பெண்ணா இருந்துகிட்டு இது போன்ற கொடுமை செய்வதை ஏத்துக்க முடியலை.

முதலில் ஒரு முறை பூர்ணாவின் வேஷம் கலைஞ்சப்போ இவளோ கோபம் அவள் மேல் வரலை. காரணம் ரவி அத்தானுக்குன்னு அவளை வளர்த்துட்டு சுதா ரவியை தட்டிப் பறிச்சுக்கிட்டதில் வந்த கோபம் என்று.

ஆனால், இப்போது தனது பெத்த அம்மாவுடன் சேர்ந்துகொண்டு தான் வாக்கப்பட்ட அழகம்மை குடும்பத்தை பிரிக்க நினைக்கிறாள். அது மட்டும் இல்லாமல் எல்லாரையும் தனித்தனியாக பிரிக்கணும் என்றும் திட்டமிடுகிறான்.

மகேஷ் பூர்ணா

மகேஷ் பூர்ணா

மகேஷ் பூர்ணா ரெண்டு பேரும் நன்றாக வாழணும் என்று சுதாவும், ரவியும் வீண் கலகம் வேண்டாம் என்று பூர்ணா செய்த கெடுதலைகளை வீட்டில் சொல்லமல் வீட்டை விட்டு கிளம்பிடறாங்க. இந்த நிலையிலும் பழி வாங்க நினைச்சு.சுதாவின் இறந்து போன முதல் புருஷன் குடும்பத்தை தூண்டி விட்டு, சுதாவின் குழந்தை அப்புவை கடத்த திட்டம் போட்டு நடத்தியும் விட்டாள்.

அழகு காவ்யா

அழகு காவ்யா

இந்த விஷயத்தை செய்ததை போனில் பேசிக்கொண்டு இருந்ததை அழகம்மையும், அவங்க கடைசி மகள் காவ்யாவும் கேட்டுடறாங்க. இருந்தாலும் ,பூர்ணா இல்லவே இல்லை என்று சாதிக்கிறாள், அவளின் புருஷன் அதாவது அழகம்மையின் மகன் மகேஷ் வந்ததும் அவனிடம் சொல்ல, மகேஷ் பொண்டாட்டியை நம்பாத அப்பா அம்மாவைத் திட்டி பேசறான்..

ரவி குடும்பம்

ரவி குடும்பம்

உங்களுக்கு சுதா ரவி அவன் பெறாத குழந்தை அப்புதான் முக்கியம். நம்ம வீட்டு வாரிசு பூர்ணாவின் வயிற்றில் வளர்ந்து இப்போ ஒண்ணும் இல்லைன்னு ஆகிப் போச்சு. அதை பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லை.பெரிய மகன்தான் முக்கியம் உங்களுக்குன்னு கத்தறான். இனிமேலும் இந்த வீட்டில் இருக்க கூடாதுன்னு அழகம்மையும், புருஷனோட கிளம்பிடறாங்க.

பூர்ணா மகேஷ்

பூர்ணா மகேஷ்

வீட்டில் பூர்ணா மகேஷ் மட்டுமே இருக்க, அவங்க கடைசி பையன் திருநா அம்மா அம்மான்னு கூப்பிட்டு கொண்டே இருந்தாலும் மகேஷும், பூர்ணாவும் பதில் கொடுக்கமா இருக்காங்க. கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும் அம்மாவை காணலையேன்னு குழப்பத்தில் இருக்கான் திருநா. மகேஷ் அம்மா எங்கேடான்னு அண்ணன்கிட்டே கேட்கறான்.

கூட்டு குடும்பத்தை அழகம்மை குருவி கூடு போல கட்டி வச்சு இருந்தாங்க. பூர்ணா பெரிய கல்லையே தூக்கிப் போட்டு கலைச்சுட்டாளே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+