Azhagu Serial: பூர்ணா நெஞ்சுல உப்பை வச்சு சுடணும்...எவ்ளோ நெஞ்சழுத்தம்!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் அழகம்மை இரண்டாவது மருமகள் பூர்ணா நடக்க முடியலைன்னு ஒரு டிராமா போட்டு, ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிச்சுக்கறா. அம்மா தி கிரேட் லாயர் சகுந்தலா தேவி அவளை கேசிலிருந்து முழுவதுமா விடுவிச்சு, கேஸை முடிச்சும் வச்சுடறாங்க.
எல்லார்கிட்டயும் பூர்ணா திருந்திட்ட மாதிரி நடிக்கறா. திட்டம் போட்டபடி மகேஷ்தான் வேணும்னு புருஷன் மகேஷ் வீட்டுக்கும் வந்துட்டா. இருந்தாலும் சுதாவை வீட்டை விட்டு துரத்தணும்னு மறுபடியும் சதி திட்டங்களில் இறங்கிடறா. சுதாவையும் ரவியையும் பிரிக்கப் போட்ட திட்டத்தில், பூர்ணாவின் நடவடிக்கை மேல சந்தேகம் வந்த சுதா, பூர்ணா டான்ஸ் ஆடுவதை போனில் வீடியோ எடுத்து வச்சு, உன்னால நடக்க முடியும்னு தெரிஞ்சுகிட்டேன் பூர்ணா. இனி உன் ஆட்டம் செல்லாதுன்னு சொல்லிட்டு போறா.
மகேஷ் பூர்ணாவை டாக்டர்கிட்டே காண்பிக்க அழைச்சுட்டு போறான். அந்த டாக்டரிடமும் நடக்க முடியலைன்னு பொய் சொல்றான்னா எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கணும் இவளுக்கு. நெஞ்சில உப்பை வச்சு சுடணும்னு சீரியல் பார்க்கறவங்க திட்டிகிட்டே பார்க்கறாங்க.

அழகு சீரியல் ரேவதி
இப்படி அழகு சீரியல் சுவாரஸ்யமா ஒளிபரப்பாகி வருது. இப்போது யாரும் ரேவதி இல்லையே என்று கேள்வி கேட்காத அளவுக்கு கதையின் அழுத்தம் கூடிவிட்டது. காரணம் பூர்ணா திருந்துவது போல் நடித்து நாடகமாடுவது... முதலில் நம்பிய சுதா, அவளுக்கு பணிவிடைகள் செய்தது, சப்போர்ட் செய்தது என்று சீரியல் பார்ப்பவர்களுக்கு பூர்ணா மீது ஆத்திரமாகவும், சுதா மீது பரிதாபமாகவும் இருக்கும்படி கதை சென்று கொண்டு இருக்கிறதது.

பூர்ணா மகேஷ்
பூர்ணாவை இப்படியே எத்தனை நாளைக்கு வச்சு இருக்கறது. அவளை நல்ல டாக்டர் கிட்டே காண்பிக்க அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன் அண்ணி. பூர்ணாவையா அங்கே கூப்பிட்டுக்கிட்டு போயி காண்பிச்சுட்டு வரேன்னு கிளம்பறான் மகேஷ். அப்போதும் தனது கால் நடக்க முடியும்னு பூர்ணா சொல்லலை. மகேஷ் கூட டாக்டர்கிட்டே கிளம்பிட்டா.

டாக்டர்கிட்டே பொய்
டாக்டர் காலைப் பார்க்கும்போதும், காலை அங்கே இங்கே தொட்டுப் பார்க்கும்போதும், தன்னால் நடக்க முடியாது என்கிற பொய்யை மெயின்டெயின் பண்றா பூர்ணா. இல்லையே உன் கால் நல்லா நடக்க முடியணுமே...என்று சந்தேகப்பட்டு, காலைத் தட்டி தட்டிப் பார்க்க டாக்டர் கண்டு பிடிச்சுடறாங்க. நிஜமா சொல்லு உன்னால நடக்க முடியாது என்று மிரட்ட, உண்மையை சொல்லிவிடுகிறாள் பூர்ணா.

அம்மாவா நான் தோற்றுவிட்டேன்
இப்போதுதான் சகுந்தலா தேவிக்கு டாக்டர் எல்லா உண்மையையும் சொல்றாங்க. அந்த டாக்டர் சகுந்தலாதேவி கூட படிச்சவங்க வேற. உன் பொண்ணு விஷயத்துல நீ இப்படி ஏமாந்து போயிட்டியேன்னு அவங்க சொல்ல, இவங்களுக்கு அப்போதுதான் உரைக்கிறது.நான் ஏமாந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி வீட்டை விட்டு புறப்பட்டு இனிமே நான் உயிரோட இருக்க மாட்டேன்னு போறாங்க.
பூர்ணாவின் செயல் கடைசியில் பெற்ற தாயை இந்த அளவுக்கு கொண்டு போயி விட்டு இருக்கு. சகுந்தலா தேவியா நடிச்சு இருக்கும் காயத்ரி ஜெயராம் நல்லா நடிச்சு இருக்காங்க.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications