Azhagu serial: அரை வட்ட நிலா மச்சம்..நல்லாருக்கே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் உள்ளங்காலில் இருக்கும் அரை வட்ட நிலா மச்சகம்தான் தனது பெண்ணுக்கான அடையாளம் என்று சகுந்தலா தேவி சொல்றாங்க.

இதில் கொடுமை என்னவென்றால் மகள் என்று தெரியாமல் சகுந்தலா தேவி சுதாவை எதிரியாகப் பார்ப்பதும், அக்கா என்று தெரியாமல் பூர்ணா சுதாவை எதிர்ப்பதும் என்று கதை நன்றாகவே நகர்கிறது.

வயசானாலும் ரேவதி அழகுதான்.சீரியலிலும் அவர் பெயரை அழகம்மை என்கிற அழகுவாக வைத்து அவரின் கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார்கள்.

குணத்தில் பூர்ணா

குணத்தில் பூர்ணா

அழைகம்மையின் இரண்டாவது மருமகள் பூர்ணா குணத்தில் சரியில்லாமல் போனதில் குருவிக் கூடு போல இருந்த அழகம்மையின் குடும்பம் வீட்டை விட்டே கிளம்பி விடுகிறார்கள். சுதா வாங்கின அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை. ஒரு பெண் செய்யக் கூடாத அத்தனை வக்கிர வேலைகளையும் செய்த பூர்ணாவையும் கடைசியில் போலீஸ் லாக்கப்பில் வச்சுடறாங்க

குழந்தை கடத்தல் குற்றம்

குழந்தை கடத்தல் குற்றம்

சுதாவின் குழந்தையை பாஸ்கருடன் சேர்ந்து பூர்ணா கடத்தியதை குற்றமாக்கி போலீஸ் பூர்ணாவை கைது செய்கிறது. அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டு பின்னரும் அடுத்த நாளே சகுந்தலா தேவி ஜாமீனில் மகளை எடுத்து விடுகிறார். இந்த குற்றத்துக்கு தணடனை என்ன என்று மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த கதை ஆசிரியர் முன் வரவில்லை.

இன்னொரு பெண்

இன்னொரு பெண்

தொலைந்து போன பெண் குழந்தைகளில் ஒருத்தி பூர்ணாவாக கிடைச்சாச்சு.இன்னொரு மகள் கிடைக்க பாடுபட்டும் இன்னும் கிடைத்த பாடு இல்லை.டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் இன்னொரு பெண்ணையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து அங்க அடையாளமாக உள்ளங்காலில் அரை வட்ட நிலா மச்சம் ஒன்று இருக்கும்னு சொல்றாங்க.

கண்டேன் கோயிலில்

கண்டேன் கோயிலில்

பூர்ணாவை ஜாமீனில் எடுத்துவிட்டு,கோயிலுக்கு அவள் பேரில் அர்ச்சனை செய்ய வந்த சகுந்தலா தேவி, இன்னொரு பெண்ணையும் கண்ணில் காட்டு இன்னிக்குன்னு சாமிகிட்ட வேண்டிக்கறாங்க. அவங்க வேண்டிக்கிட்டு வரும்போது சுதா அங்க பிரதட்சணம் செய்ய, ஒரு மருமகளை ஜெயிலுக்கு அனுப்பிட்டு இன்னொரு மருமகளோட வேண்டுதலான்னு கிண்டல் பண்றாங்க. அழகம்மை பேசாமல் நிற்க, வம்பிழுத்து சண்டை போடறாங்க.

வா சகு போலாம்னு கணவர் கூப்பிட யதேச்சையாக திரும்பிப் பார்த்தால், அங்க பிரதட்சணம் செய்து வரும் சுதாவின் காலில் அரை வட்ட நிலா அளவில் மச்சம். சுதாதான் தன்னோட இன்னொரு பெண் என்று சாமி தனக்கு அடையாளம் காட்டிவிட்டதாக சகுந்தலா தேவிக்கு சந்தோசம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+